அந்தகன்
இயக்கம் – தியாகராஜன்
நடிகர்கள் – பிரசாந்த , சிம்ரன் , சமுத்திரக்கனி
இசையமைப்பாளர் – சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு – ஸ்டார் மூவிஸ், தியாகராஜன் .
பார்வையற்றவரான ஒரு பியானோ இசைக்கலைஞர் லண்டனில் நடைபெறும் இசைப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார். அதற்காக பியானோ வகுப்பு எடுத்து பணம் சேர்ப்பதற்கு, மதுபானக்கூடம் ஒன்றில் பியானோ வாசிக்கும் வேலை கிடைக்கிறது. அதன் மூலம் ஒரு பிரபலத்தின் நட்பு கிடைக்க, அவரது அழைப்பின் பேரில் அவரது வீட்டில் சிறு இசை நிகழ்ச்சி நடத்த செல்கிறார். ஆனால், அங்கு சென்றதும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அவரின் கண் முன் நடக்கிறது, பார்வையற்றவராக இருக்கும் முன் நடக்கும் சம்பவங்களால் அவருக்கு எப்படிப்பட்ட சிக்கல் ஏற்படுகிறது?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதை காட்சிக்கு காட்சி திருப்பங்களோடு சொல்வது தான் ‘அந்தகன்’.
உலக சினிமா பிரியர்களுக்கும் ஹிந்தி படங்கள் பார்க்கும் ரசிகர்களுக்கும் நிச்சயம் இந்தப் படத்தின் கதையை பற்றி நன்றாக தெரிந்திருக்கும், ஏனென்றால் இது ஹிந்தியில் வெளியான அந்தாதும் படத்தின் ரீமேக். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரஷாந்தை நாயகனாக பார்த்தாலும், அதே இளமையோடும், புத்துணர்ச்சியோடும் திரையில் தோன்றுகிறார். பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்துள்ளார். எதிர்பார்க்காத சம்பவங்கள் தன் கண் முன் நடப்பதை பார்த்து பதற்றமடையும் பிரஷாந்த், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது, தன்னை கொலை செய்ய வருபவரிடம் இருந்து தப்பிப்பது, பார்வையற்ற தன்னை சுற்றி இருக்கும் ஆபத்துகளை நினைத்து பயப்படுவது என அனைத்து இடங்களிலும் பிரஷாந்தின் நடிப்பு அற்புத்மாக உள்ளது. இந்தப் படம் அவரின் நடிப்பு திறனை அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டது,
ஒரு கட்டதில் பிரசாந்த் மற்றும் சிம்ரன் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நடித்த அத்தனை படங்களும் வெற்றிதான், இன்னிலையில் பலமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன், கிடைக்கும் இடங்களில் தனது நவசர நடிப்பை வெளிக்காட்ட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சில இடங்களில் அவரது முகத்தில் வயது முதிர்வு தெரிவது சிமி கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பை குறைத்தாலும், அவரது அதிரடியான நடிப்பு அந்த குறையை மறைத்துவிடுகிறது. தேவதை போல் பிரஷாந்த் வாழ்க்கையில் திடீர் எண்ட்ரி கொடுக்கும் பிரியா ஆனந்த், அழகாக இருக்கிறார். பிரஷாந்துடன் அன்பாக உறவாடுகிறார். தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் அழகாக நடித்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, சூழலுக்கு ஏற்ப முகத்தை மாற்றி ரியாக்ஷன் கொடுக்கும் காட்சிகள் அசத்தல். அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், சில காட்சிகளில் வந்தாலும் தனது வழக்கமான அதிரடி மூலம் திரையில் சரவெடியாக வெடித்திருக்கிறார். நடிகர் கார்த்திக்காகவே நடித்திருக்கும் நவரச நாயகன் கார்த்திக், பூவையார், ஊர்வசி, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் திரைக்கதையின் திருப்பங்களுக்கு ஏற்ப சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் சவால் என்றால் அது ஒளிப்பதிவாளருக்குத் தான் ஏனென்றால் ஏற்கனவே அனைத்து காட்சிகளும் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும் எனினும் அதில் ஒரு புதுமையை உருவாக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது அதை ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் சிறப்பாக செய்துள்ளார்,கேமரா காட்சிகள் அனைத்தையும் கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் படமாக்கி கண்கலங்கு விருந்து படைத்திருக்கிறது. கதாபாத்திரங்களை மிக அழகாக காட்டியிருப்பவர், ஒவ்வொரு காட்சியிலும் பயன்படுத்திய வண்ணங்கள் ரசிகர்களை ஈர்க்கிறது.
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணின் இசையமைதுள்ளார், பாடல்கள் ஓரளவு இருந்தாலும் பின்னணி இசையில் சுழலுக்கு ஏற்ப வித்தியாசத்தை காட்டி படத்தோடு ஒன்ற வைத்துள்ளார், படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பியானோ உள்ளிட்ட மென்மையான இசைக்கருவிகள் மூலம் பின்னணி இசையை ஒரு கதாபாத்திரமாக பயணிக்க வைத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா தனது பணியை சிறப்பாக செய்துள்ளார், திரைக்கதையில் இடம்பெறும் திருப்பங்களை எந்தவித குழப்பமும் இன்றி ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கிறார்.
இந்தியில் சினிமாவில் பெரிய மைல்கல்லை பத்தித்த படம் ‘அந்தாதுன்’ , அதன் ரீமேக் என்றாலும், தமிழுக்கு ஏற்றபடி பல மாற்றங்களுடன் இப்படத்தை இயக்கியிருக்கும் தியாகராஜன், படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நம்மை திரைக்குள் இழுத்துவிடுகிறார். பார்வையற்றவராக பிரஷாந்த் தோன்றிய சில நிமிடங்களில் இடம்பெறும் ஒரு திருப்பம், ஏன் இப்படி? என்ற கேள்வியுடன் அவருடன் பயணிக்க வைக்கிறது. அதை தொடர்ந்து கார்த்திக் வீட்டுக்கு பிரஷாந்த் செல்லும் போது நடக்கும் சம்பவம் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. அதில் இருந்து, என்ன நடக்கும்?, என்ன நடக்கும்? என்று அடுத்தடுத்த காட்சிகள் எதிர்பார்ப்போடு நகர்வதோடு, திரைக்கதையில் வரும் புது புது திருப்பங்கள், திரையில் இருந்து நம் கண்கள் அகலாதபடி பார்த்துக்கொள்கிறது.படத்தில் இடம்பெறும் சிறு சிறு வேடங்களில் கூட முன்னணி நடிகர்கள் நடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சில காட்சிகளில் வந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை வடிவமைத்திருக்கும் இயக்குநர் தியாகராஜன், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை இருக்கையில் கட்டிப்போட்டு விடுகிறார்.
மொத்தத்தில், இந்த ‘அந்தகன்’ ஒரு சிறந்த சஸ்பெண்ஸ்
Rating 3.7/5