இங்க நான்தான் கிங்கு படம் எப்படி இருக்கு?

இங்க நான்தான் கிங்கு !

இயக்குனர் – ஆனந்த் நாரயணன்
நடிகர்கள் – சந்தானம் , பிரியாலயா , தம்பி ராமையா
இசை – டி. இமான்
தயாரிப்பு – கோபுரம் ஃபில்ம்ஸ் , அன்புச்செழியன்

ஒரு இளைஞன் அப்பா-அம்மா இல்லாமல் வாழ்ந்து வருகிறார், இன்னிலையில் தனக்கு தானே பெண் தேடி வருகிறார். வீடு இருந்தால் பெண் கிடைக்கும் என நம்பி 25 லட்சம் கடன் வாங்கி சென்னையில் ஒரு ப்ளாட் வாங்குகிறார். அந்த 25 லட்சம் கொடுக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் என இருக்க, ஒருவர் தன்னை பெரிய பணக்காரன் என்பது போல் காட்டிக்கொண்டு தன் பெண்ணை சந்தானத்துக்கு திருமணம் செய்து வைக்கிறார். இது தெரிந்து அவன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறான், ஒரு நாள் தான் வேலை செய்யும் இடத்திற்கு தன் மனைவி, மற்றும் தன் குடும்பத்தையே அழைத்து செல்கிறார்.அங்கு ஒரு பிரச்சனையில் தன் MDயை அடிக்க போக, அடுத்த நாள் வீட்டிலும் பிரச்சனை, அப்போது அந்த ப்ளாட் கீழே MD வர அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வர, வீட்டில் கரண்ட் ஷாக் அடித்து அங்கையே இறக்கிறார். பிறகு எல்லோரும் அவரை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்திவிட்டு வீட்டிற்கு வந்தால், அதே MD வீட்டில் உயிரோடு உட்காந்திருக்க, அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

காமெடி படங்கள் என்றாலே ஒரு மிக்கபெரிய குழப்பம் ஏறப்பட வேண்டும். அந்த குழப்பத்தில் ஹீரோ மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதே சுவாரஸ்யமாக இருக்கும். சந்தானம் தன்னால் முடிந்த அளவிற்கு ஒன் லைனில் ஸ்கோர் செய்கிறார், அவருடன் கை கோர்க்க இந்த முறை தம்பி ராமையா, பாலசரவணன் என இருவர் மாட்டியுள்ளனர். தம்பி ராமையா வழக்கம் போல் தன் எக்ஸ்ட்ரா ஆக்டிங்கில் ஸ்கோர் செய்தாலும் பல படங்களில் இதை பார்த்தாச்சே என்று தான் தோன்றுகிறது சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

ரீல்ஸில் பேமஸ் ஆகிய ப்ரியாலாயா முதல் படத்திலேயே நன்றாக நடித்துள்ளார், அதிலும் விவேக் பிரசன்னா இறந்ததும், அதை அவர் எப்படி இறந்தால் என்று சொல்லும் இடம் சந்தானம் மட்டுமின்றி ஆடியன்ஸும் ஷாக் தான்.அப்படி ஒரு குழப்பம் இதிலிம் இருக்கிறது, ஆனால், அது இருந்தும் திரைக்கதையில் பெரிய சுவாரஸ்யம், விழுந்து சிரிக்கக்கூடிய பெரிய காமெடி காட்சிகள் இல்லாதது கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது.

இந்தப்படத்தில் பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை, இமானின் இசையில் பிண்ணனி மட்டும் கை கொடுத்துள்ளது. அதுவும் படத்தை நகர்த்த மட்டும் உதவியுள்ளது, ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு சாதாரண காமெடி படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.

ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு இயக்குனர் ஒரு காமெடி படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் இத்தனை நடிகர்கள் இருந்தும் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் படம் அங்காங்கே தொய்வடைகிறது, ஆனால் சந்தானம் தனியாக இந்தப்படத்தை தாங்கியுள்ளார். இரண்டாம் பாதியில் மருத்துவமனை காமெடி காட்சிகள் நன்றாக இருந்தது.

மொத்தத்தில் ‘இங்க நான்தான் கிங்கு’ கிங்காவதற்கு முயற்சி செய்துள்ளது.

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *