இடி மின்னல் காதல் படம் எப்படி இருக்கு?

இடி மின்னல் காதல்

இயக்குனர் : பாலாஜி மாதவன்
நடிகர்கள் – சிபி , பாவியா திரிகா, யாஸ்மினி, ஜெகன்
இசை : சாம் சி எஸ்
தயாரிப்பாளர்கள் : ஜெயச்சந்திரன் பின்னன்மெனி , பாலாஜி மாதவன்

ஒருவன் வெளிநாட்டிற்கு செல்லுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டு இறுதியாக தன் காதலியை ஒரு முறை பார்க்கலாம் என்று நினைத்து அவளை சந்திக்க செல்கிறான், அவனும் காதலையும் காரில் செல்லும்போது ஒரு விபத்து ஏற்படுகிறது , அந்த விபத்தில் ஒருவர் இறந்து விடுகிறார் , இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க கதாநாயகி அவனுக்கு உதவுகிறார், அந்த விபத்தில் இறந்தவருக்கு பல கடன்கள் இருக்கிறது அதனால் இறந்தவரின் மகனை வில்லன் கதாபாத்திரம் கடத்தி சில வேலைகளுக்கு பயன்படுத்த நினைக்கிறது , அந்த சிறுவன் யார் என்றே தெரியாமல் கதாநாயகன் அவனை காப்பாற்றும் சூழல் ஏற்படுகிறது, இதன் பின் என்ன ஆனது தந்தையை கொன்றது யார் என்று தெரிந்ததா ? அதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை,

இந்தப் படம் இரண்டு கதைகள் நான் லீனியாராக ஒன்றன் பின் ஒன்றாக ஒரு கோட்டில் இணையும் வண்ணம் திரைக்கதை அமைந்துள்ளது,

இந்தப் படத்தில் சிபி கதாநாயகனாக நடித்துள்ளார், ஒரு இளம் கதாநாயகன் தோற்றத்தில் சிபி பக்காவாக பொருந்தியுள்ளார், நடை உடை பாவனைகள் என அனைத்திலும் விலாசுகிரார், அவரின் நடிப்பு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது என்று தான் கூற வேண்டும் , விஜயின் மாஸ்டர் படத்தில் உடன் நடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் இப்போது தனி கதாநாயகனாக இந்தப் படத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார்,

காதாணயகனுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் பவ்யா ட்ரிகா நடித்துள்ளார், இந்தப் படத்தில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது, அளவான எமோசன் அழகான நடிப்பு என்று அசத்தியுள்ளார், வெறும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் படத்துடன் சேர்ந்து ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே நடித்துள்ளார்,

படத்தில் தந்தை இறந்தால் சிறுவன் என்ன கஸ்டமெல்லம் அனுபவிப்பான் என்பதை சிறுவனாக நடித்திருக்கும் ஆதித்யா அழகாக காட்டியுளான், இந்தப் படத்திற்கு பிறகு அவனுக்கு வாய்ப்புகள் அதிகம் ஏற்படும், அதே போல மற்ற கதாபாத்திரங்களும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், குறிப்பாக பாலியல் தொழிலாளியாக நடித்த யாஸ்மின் மற்றும் எம் ஆர் ராதாரவி ஆகியோர் படத்திற்கு வழு சேர்த்துள்ளனர்,

படத்தில் இசை பெரிதாக தாக்கம் ஏற்படுத்தாவிட்டாலும் கதையை நகர்துவதற்கு பெரிதாக உதவியுள்ளது, படத்தின் கதைக்கெற்ற ஒளிப்பதிவு மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பால் இந்தப் படம் ஒரு இடத்தை பிடிக்கும் ,

ஒருவன் செய்த தவறினால் ஓர் உயிர் போய் விடுகிறது, அதற்கு அவன் எப்படி வருந்துகிறான், அந்த விபத்தால் அந்த குடும்பம் என்ன ஆகிறது என்பதை பாசம் கலந்த ஒரு ஆக்சன் படமாக எடுத்துள்ளனர்,

மொத்தத்தில் ‘இடி மின்னல் காதல்’ குற்ற உணர்வை போக்க ஒருவன் எந்த அளவிற்கு செல்வான் என்பதை ஆக்சன் கலந்து கூறியிருக்கிறது,

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *