இந்தியன் 2
இயக்குனர் – ஷங்கர்
நடிகர்கள் – கமலஹாசன் , சித்தார்த் , ப்ரியா பவானி ஷங்கர்
இசை – அனிருத்
தயாரிப்பு – லைகா ப்ரொடக்ஷன்
ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து யூ ட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சமூகத்தில் ஊழலால் நடக்கும் அநியாயங்களை யூடியூப் வீடியோக்களால் தட்டிக் கேட்டாலும் அதன்மூலம் எந்தவொரு பயனும் இல்லை என்றதும், இந்தியன் தாத்தா வந்தால் நல்லா இருக்கும் என நினைக்கும் அவர்கள் #ComebackIndian ஹாஷ்டேக்கை உருவாக்கி வைரலாக்க தொடங்குகின்றனர். வெளிநாட்டில் உள்ள ஒருவர் இதனை பார்க்க, இந்தியன் தாத்தா இங்கே தான் இருக்கிறார் என்கிறார். அவரை இந்தியாவுக்கு போகவும் சொல்கிறார். இந்தியா திரும்பும் இந்தியன் தாத்தாவை ஒருவர் கைது செய்ய துடிக்க, அவரிடம் இருந்து தப்பித்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஊழல்வாதிகளை வர்மக் கலை வாயிலாக போட்டுத் தள்ள தொடங்குகிறார். இறுதியில் இந்தியன் தாத்தா கடைசியில் கைதானாரா? தப்பித்தாரா? என்பது தான் இந்தியன் 2 படத்தின் மீதிக்கதை.
நாட்டில் நடக்கும் லஞ்ச ஊழல்களை பொறுத்துகொள்ள முடியாத சமூக வலைத்தள ஊடகவியலாளர்கள் மூன்று பேர் போராட்டம் நடத்தி தோற்றுப்போக, வேறு வழியில்லாமல் 28 ஆண்டுகளுக்கு முன்பு லஞ்சவாதிகளை வேட்டையாடிய இந்தியன் தாத்தாவை மீண்டும் வரவழிக்க சமூக வலைத்தளங்கள் வழியாக வேண்டுகோள் வைக்கிறார்கள். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கிய இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.
கமல் நடிப்பு மொத்த படத்தையும் தாங்கியுள்ளது. அதேபோல் படத்தில் நடித்துள்ள மற்றவர்களின் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர். மறைந்த நடிகர் விவேக் காமெடி அனைவரையும் சிரிக்க வைக்கிறது.பாபி சிம்மாவின் கதாபாத்திரம் படத்துக்கு ஏற்றார் போல இல்லை.சித்தார்த் தான் அதிக காட்சிகளை கையாண்டுள்ளார், ஒரு நேர்மையான மனிதனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார், நடிகை பிரியா பவானி ஷங்கர் கதைகேற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. மொத்த படத்தையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார், இந்தப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார், படத்தின் பிரம்மாண்டத்தை அவர் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்
இந்தியன் முதல் பாகத்தில் தமிழ்நாட்டில் நடந்த லஞ்சம் ஊழலை சுட்டிக்காட்டி படம் எடுத்திருந்த ஷங்கர், இரண்டாம் பாகத்தில் இந்தியா முழுக்க சேனாபதி சென்றால் என்ன நடக்கும் என்பதை பிரமாண்டமாக காட்டியுள்ளார்.அவரது வாழ்க்கை மற்றும் அந்த கதைக்கு பின்னர் என்ன ஆனது என்பதே இப்படம்,அதனை அவரது பிரம்மாண்ட ஸ்டைலில் உருவாக்கியுள்ள்ளார்.
மொத்தத்தில் இந்த ‘இந்தியன் 2’ சேனாபதியின் ரீ என்ட்ரீ.
Rating 3/5