எப்போதும் ராஜா பாகம் 1
இயக்குனர்- வின் ஸ்டார் விஜய்
நடிகர்கள் – வின் ஸ்டார் விஜய், டெப்ளினா
இசை – கபிலேஸ்வர் ராம்ஜி
தயாரிப்பு – வின் ஸ்டார் விஜய்
இரட்டைப்பிறவிகள் தான் இந்தப்படத்தின் கதா நாயகர்கள் ஒருவர் போலீஸ் அதிகாரியாகவும் மற்றொருவர் வாலிபால் விளையாடுபவராகவும் இருக்கின்றனர், போலிஸ் ராஜா நேர்மையான அதிகாரியாக இருக்கிறார், அவரின் அந்த நேர்மை அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போகிறது. அதனால் அடிக்கடி இடம் மாறிக்கொண்டே இருப்பார். வாலிபால் ராஜாவின் கனவு இந்தியாவிற்காக வாலிபால் விளையாட வேண்டும் என்பது. அதற்காக தொடர்ந்து வாலிபால் ராஜா போராடிக்கொண்டிருக்கிறார். இவரையும் விளையாட விட கூடாதென்பதற்காக சிலர் முயற்சிக்கின்றனர். போலீஸ் ராஜா ஒரு சில காரணத்திற்காக மதுரைக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார், அந்த சமயத்தில் வாலிபால் ராஜாவை சிலர் ஒன்று சேர்ந்து கையை உடைத்துவிடுகின்றனர் மற்றும் அவரின் தங்கையை கடத்திவிடுகின்றனர். இதன் பிறகு போலிஸ் ராஜா எப்படி இந்த பிரச்சனையை சரி செய்தார் என்பதே படத்தின் மீதி கதை
குளோபல் ஸ்டார், யுனிவர்சல் ஸ்டார், பவர் ஸ்டார் வரிசையில், வின் ஸ்டார் என்ற பட்டத்துடன் நாயாகன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வின் ஸ்டார் விஜய் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். நாயகன் வின் ஸ்டார் அண்ணன், தம்பி என இரண்ட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தம்பி வாலிபால் விளையாட்டு வீரராகவும் இருக்கிறார்கள்.
போலீஸ் மற்றும் விளையாட்டு வீரர் என்று முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் .அவர் நடிப்பை குறை சொன்னாலும் ரசிகர்களை இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து சிரிக்க வைத்திருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் டெப்ளினா, வில்லியாக நடித்திருக்கும் கும்தாஸ், மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பிரியா என அனைவரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
படத்தில் இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் கதைக்கு சம்பந்தமில்லாமல் வேலை செய்துள்ளனர். படத்தின் தரம் பல இடங்களில் குறைந்துள்ளது குறிப்பாக ஒளிப்பதிவாளர் எடுத்துள்ள சில காட்சிகள் படத்தை மோசமாக்கி விட்டது.எழுதி இயக்கி தயாரித்திருக்கும் நாயகன் வின் ஸ்டார் விஜய், ஒரு திரைப்படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதற்கான உதாரணமாக இந்த படத்தை எடுத்திருந்தாலும் முதல் பாதி நகைச்சுவை காட்சிகள் நம்மை ரசித்து சிரிக்கும்படி அமைந்துள்ளது
சந்தானம், யோகி பாபு இணைந்து காமெடி செய்திருந்தால் கூட நாம் இப்படி சிரித்திருக்க மாட்டோம், ஆனால் வின் ஸ்டார் விஜய் நம்மை ஒரு இடத்ஹ்டில் கூட போர் அடிக்க விடவில்லை. அதே சமயம், சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல துடிப்பான வசனங்களை பேசி கைதட்டலும் பெறுகிறார்.
மொத்தத்தில் இரண்டு மணி நேரம் கவலையை மறக்க இப்படம் சிறந்த தேர்வு!
Rating 2/5