ஒயிட் ரோஸ் படம் எப்படி இருக்கு?

ஒயிட் ரோஸ்

இயக்குனர் – ராஜசேகர்
நடிகர்கள் – கயல் ஆனந்தி , ஆர் கே சுரேஷ் , விஜித்
இசை – சுதர்சன்
தயாரிப்பு – என், ரஞ்சனி

பாலியல் தொழில் செய்யும் பெண்களை கடத்தி அவ்ர்களை கொடூரமாக கொலை செய்யும் ஒருவன் ஒரு சாதாரண பெண்ணை கடத்தி வைத்து அதெ போல கொலை செய்ய முயல்கிறான் , அவனிடம் இருந்து அந்தப் பெண் தப்பிக்க முயல்கிறாள் , இதன் பின் அவள் தப்பித்தாளா இல்லையா என்பதே இப்படத்தின் மீதிக்கதை,

கதையின் நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தாலும், ஒரு குழந்தைக்கு தாய் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு குழந்தை முகத்தோடு இருக்கிறார். கொலையாளியிடம் சிக்கிக்கொண்டு தப்பிக்க போராடுபவர் தனது நடிப்பு மூலம் பயம் மற்றும் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்திவிடுகிறார். அவரது இயல்பான நடிப்பு மற்றும் முக பாவனை நம்மை அந்த சூழலுக்கு கொண்டு செல்கிறது.

இந்த படத்தில் சைக்கோ கொலையாளியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் வசனம் பேசாமல் நடித்திருக்கிறார். சைக்கோ கொலையாளி என்றாலும், அவருக்கான வாய்ப்பு என்னவோ மிக குறைவு தான். அதை தன்னால் முடிந்தவரை அந்தக் கதாபாத்திரத்துக்கு மெனக்கெட்டிருக்கிறார். அதே சமயம், இளம் வயது ஆர்.கே.சுரேஷாக நடித்திருக்கும் பரணிக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் கோட்டை விட்டிருக்கிறார்.இன்னும் சிறிது மெனக்கெடல் போட்டு அந்தக் கதாபாத்திரத்தை செய்திருக்கலாம்.

கயல் ஆனந்தியின் கணவராக நடித்திருக்கும் விஜித், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரூசோ ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சசி லயா, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹசின், தரணி ரெட்டி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் வெளியாகும் சைக்கோ க்ரைம் திரில்லர் படங்களை, எதாவது ஹாலிவுட் உள்ளிட்ட வெளிநாட்டு படங்களுடன் ஒப்பிட்டோ அல்லது அதன் பாதிப்பு என்று சொல்வார்கள். ஆனால், இந்த படத்தை பொறுத்தவரை, தமிழ் சினிமாவில் வெளியான சைக்கோ க்ரைம் திரில்லர் படங்களின் பாதிப்பாகவே இருக்கிறது. அவை எந்த படங்கள் என்பது படத்தை பார்க்கும் போது உங்களுக்கே புரிந்துவிடும். எழுதி இயக்கியிருக்கும் கே.ராஜசேகர் படத்தின் முதல் காட்சியிலேயே இது ஏற்கனவே வந்த ஒரு தமிழ்ப் படத்தின் பாதிப்பு என்பதை புரிய வைத்துவிடுவதோடு, அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதை ரசிகர்கள் கணிக்கும்படி கதையை நகர்த்தி செல்கிறார்.

ஒளிப்பதிவாளர் வி.இளையராஜாவும், இசையமைப்பாளர் சுதர்சனும் தங்கள் பணி மூலம் ரசிகர்களிடத்தில் பயத்தை கடத்த பெரும் முயற்சி மேற்கொண்டாலும், அவ்வபோது இது சைக்கோ க்ரைம் திரில்லர் ஜானர் படம் என்பதை மறந்துவிட்டு பணியாற்றியிருக்கிறார்கள்.

தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளி, அவரை பிடிப்பதில் தீவிரம் காட்டும் காவல்துறை ஆகியவை நாம் ஏற்கனவே பார்த்தது என்பதால், அந்த ஏரியாவில் அதிகம் கவனம் செலுத்தாத இயக்குநர், சைக்கோ கொலையாளிடம் சிக்கிக் கொள்ளும் கயல் ஆனந்தியை மையப்படுத்தி அமைத்திருக்கும் திரைக்கதை மற்றும் சைக்கோ கொலையாளியின் பின்னணி பற்றி சொல்வது படத்திற்கு சற்று சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. படத்தின் நேரத்தை குறைப்பதற்காக பல காட்சிகள் பாதியாக காட்டி நம்மிடம் பதியாமல் செய்து விட்டனர்.

மொத்தத்தில், இந்த ‘ஒயிட் ரோஸ்’ படத்திய சைக்கோ த்ரில்லர் ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்.

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *