கனடாவில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஊடகவியலாளர்  வேணுதன்

* கனடாவில் வசிக்கும், இலங்கையைப் பூர்வீகமாககொண்ட ஊடகவியலாளர் வேணுதன்.

* அடிப்படையில் வானொலி ஒலிபரப்பாளரான இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதிலும், செய்திக்கட்டுரைகளை எழுதுவதிலும் இயங்கிவருபவர்.

* தற்போது கனடாவிலிருந்து ஒளிபரப்பாகும் tvi தொலைக்காட்சியிலும், கனேடிய பல்கலாச்சார வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவிலும் கடமையாற்றிவருகிறார்.

* இவர் எழுதி,தொகுத்து வழங்கும் ‘வேர்’ நிகழ்ச்சி உலகத்தமிழர்களிடம் பிரபலமானது.

* தமிழ்,தமிழர்மரபு சார்ந்த விடயங்களையும், வரலாற்றுத்தகவல்களையும் ஆவணமாக்குவதும் , அவற்றை இளம் தலைமுறையினருக்குக் கடத்துவதும் இவரது நிகழ்ச்சியின் தன்மை.

* தமிழின் தொன்மையையும் பெருமைகளையும் தமிழர்கள் அறியவேண்டும் என்பதோடு அவற்றை உலகத்தார் அறியச்செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் இந்நிகழ்ச்சி படைக்கப்படுகிறது.

* வட அமெரிக்கக் கண்டத்தில் முதல் முழுநேர தமிழ் ஊடக நிறுவனமான CMR – TVI ஊடகக்குழுமம், உலகெங்கும் தமிழைச் சேர்க்கும் நோக்கோடு தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் பணிகளில் வேர் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.

* உலக நாடுகளில் பரந்துவாழும் தமிழர்கள் இனரீதியான மற்றும் மொழி ரீதியான செயற்பாடுகளில் மிகப்பெரும் உழைப்பையும் ஆர்வத்தையும் கொண்டிருக்கின்றனர். அவற்றிற்கு வேர் நிகழ்ச்சியும் ஒரு உதாரணம்.

மேலதீக தகவல்கள் :
* இலங்கையின் கிளிநொச்சியில் பிறந்து தன் 18 வயதில் புலம்பெயர்ந்தவர்.
* கல்வி : உயிர்விஞ்ஞானம் இளங்கலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *