காமி
இயக்குனர் : வித்யாதர் ககிதா
நடிகர்கள் – விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி
இசை : நரேஷ் குமரன்
தயாரிப்பாளர்கள்: கார்த்திக் சபரீஷ்
ஒருவன் சிறு வயதில் இருந்தே மனிதர்களை தொட முடியாத ஓர் நோயை ஒருவன் கொண்டுள்ளான் , அதை எந்த மருத்துவத்திலும் சரி செய்ய முடியாமல் அவதி படுகிறான். இந்த நிலையில் 36 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் ஓர் பூவினால் மட்டும் தான் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் என் ஒரு துறவி சொல்கிறார் , அந்த பூவை தேடி அவன் பயணிக்கிறார் , ஒரு பெண்ணும் அந்தப் பூவை தேடி செல்கிறாள் , இதை சுற்றி இன்னும் சில கதைகள் உள்ளன இறுதியில் அவனுக்கு அது சரியானதா மற்றவர்களுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம் என்பதே மீதிக்கதை,
இப்படத்தின் கதை நான் லீனியரில் மூன்று காலகட்டத்தில் மூன்று பேருக்கு நடக்கும் கதையாக விரிகிறது.
இந்தப் படத்தின் கதையை சொல்வதற்கே கடினமாக இருக்கும் இந்த திரைப்படம் புரிந்து கொள்ளவும் கடினமாகவே இருக்கிறது. படம் முழுக்க எல்லா காட்சிகளும் திருப்பங்களோடு படமாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் படத்தில் சுவாரஸ்யமான காட்சிகளே இல்லை. மாறி மாறி வரும் கதையும் சம்வபங்களும் அயர்வை தருகிறது. படத்தில் யாருக்கும் எந்த ஒரு நல்ல விசயமும் நடப்பதே இல்லை.
கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இயக்குனரின் கனவு படைப்பாக இருந்த படம், கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி இப்போது திரைக்கு வந்திருக்கிறது. நாயகனாக நடித்திருக்கும் விஷ்வக் சென் இப்படத்திற்கு பிறகு மூன்று படம் நடித்துவிட்டார். ஆனால் இப்போதுதான் அவர் நடித்திருக்கும் முதல் படம் வந்திருக்கிறது.
விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்கள்.
அனன்யாவும் அந்த சிறுவனும் நன்றாக நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவும் இசையும் மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. சில காட்சிகள் லாஜிக்காக இல்லையென்றாலும் கிராஃபிக் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் சாதாரண சினிமா ரசிகனுக்கு அதிகம் புரியாத நான் லீனியர் ஃபார்மேட்டில், கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதையோடு உருவாக்கியுள்ளது.
மொத்தத்தில் படத்தின் மையக்கரு காரணம் கண்டறிய பல முறை பார்க்க வேண்டியிருக்கும், குழப்பமான சினிமா பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்க வாய்ப்புள்ளது,
மொத்தத்தில் இந்த காமி படத்தை நோலன் பட பாணியில் உருவாக்க முயற்சி செய்துள்ளனர்,
Rating 3.3/5