கா
இயக்குனர் : நாஞ்சில்
நடிகர்கள் – ஆண்ட்ரியா , சலீம், கமலேஷ் , அர்ஜுன் சிங்
இசை : சுந்தர் சி பாபு
தயாரிப்பாளர்கள் : ஜான் மேக்ஸ்
படம் 1980 களில் நடக்கும் நிகழ்வாக ஆரம்பிக்கிறது, ஒரு இளைஞன் தன் காதலித்த பெண் அவனை மறுத்த காரணத்தினால் அந்த பெண் மீது ஆசிட் அடித்து விடுகிறான் , மற்றொரு புறம் ஆண்ட்ரியா வனப் புகைப்பட கலைஞராக இருக்கிறார், அப்படி காட்டில் புகைப்படம் எடுக்கும்போது , ஒரு பெண்ணை வில்லன் கும்பல் கொலை செய்கிறது, அந்த கொலையை பார்த்த இரண்டு நபர்களையும் அந்த வில்லன் கொலை செய்கிறான், இதனை ஆண்ட்ரியா பார்த்து விடுகிறார் , இதன் பின் அவர் தப்பித்தாரா , அந்த ஆசிட் அடித்த பெண்ணின் கதை என்ன அதற்கும் இதற்கும் என்ன சம்பதம் என்பதே இப்படத்தின் மீதிக்கதை,
படம் நகரும் விதம் ஒன்றுக்கொன்று தொடர்பாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக படத்தின் கதை புரிகிறது, ஆனாலும் படம் தினிப்பதாக இல்லை சரியான திரைக்கதை அமைந்ததால் படம் சலிப்பில்லாமல் செல்கிறது,
இந்தப்படத்திற்கு பெரும் பலமாக நடிகை ஆண்ட்ரியா இருக்கிறார், வைல்ட் லைஃப் போட்டோகிராபர் கதாபாத்திரம் இதுவரை ஆண்ட்ரியா நடித்திராத ஒரு கதாபாத்திரம் என்பதால் அதுவே நமக்கு ஒரு புது அனுபவத்தை கொடுத்துள்ளது, அவரது நடிப்பு அபாரமாக இருக்கிறது, படம் முழுக்க ஒரு சாதாரண பெண்ணை போல் காட்சியலிக்கிரார் , ஆண்ட்ரியா விற்கு போடப்பட்ட மேக் அப் மற்றும் உடைகள் கச்சிதமாக அவருக்கு பொறுந்தியுள்ளது, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,
இந்தப் படத்தில் சலீமிற்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது , தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தனக்கே உரித்தான குரலாலும் பாவனையாலும் சிறப்பாக நடித்துள்ளார் , ஒரு கொடூரமான கொலை செய்யும் வில்லனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்,
மற்ற கதாபாத்திரங்களாக நடித்துள்ள அர்ஜுன் சிங் போன்றவர்கள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த வில்லை சில இடங்களில் எரிச்சல் கொடுக்கும் உணர்வாகவே இருந்தது அவர்களின் நடிப்பு,
இந்தப் படத்திற்கு பெரிதும் பக்க பலமாக இருப்பது ஒளிப்பதிவு , அறிவழகன் இந்தப் படத்தை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார், படத்தின் சுவாரஸ்யம் மற்றும் வேகம் குறையாமல் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார், படத்தில் இசை பெரிதாக. கை கொடுக்கவில்லை பாடல்கள் சுமாராகவே இருந்தது,
வனத்தில் பல திருப்பங்களுடன் ஒரு குழப்பமான கதையை நம்மிடம் விளக்கி சொல்லியிருக்கிறார் இயக்குனர், திரில்லர் படங்கள் பார்க்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்தப் படம் பிடிக்கும்,
மொத்தத்தில் ‘ கா ‘ காட்டில் நடக்கும் ஒரு த்ரில்லர் சினிமா
Rating 3/5