கொடூரமான போதைக்கு எதிராக உருவாகிறது”பெட்டர் டுமாரோ”‘Better Tomorrow’ தமிழ் திரைப்படம்!

கொடூரமான போதைக்கு எதிராக உருவாகிறது
“பெட்டர் டுமாரோ”
‘Better Tomorrow’ தமிழ் திரைப்படம்!

டூ ஓவர் படத்தின் மூலம் 125′ உலகளாவிய விருதுகள் பெற்ற இயக்குனர் ஷார்வி, ‘பெட்டர் டுமாரோ’ படத்தை இயக்குகிறார்.

பிரேமா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில், சைலேந்திர சுக்லா தயாரிக்கிறார். இணைத் தயாரிப்பு சரவணன்.

அதிர்ச்சியூட்டும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படம் ‘பெட்டர் டுமாரோ’. மிகக் கொடூரமான எம்.டி.எம்.ஏ போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கும் ஜனனியின் வாழ்க்கையையும், அவள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, போராடும் அவரது சகோதரர் அரவிந்தின் வாழ்க்கையையும் இப்படம் விவரிக்கிறது. போதைப் பொருளால் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்களுக்கு தைரியத்தை அளிக்க இயக்குனர் ஷார்வி முயற்சித்துள்ளார்.

மானவ், கௌரி கோபன், பாய்ஸ் ராஜன், ஜெகதீஸ் தர்மராஜ், சைலேந்திர சுக்லா, சரவணன், பி.ஜீ.வெற்றிவேல், யுவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஷார்வி. ஒளிப்பதிவு பி.ஜீ.வெற்றிவேல், இசை குமாரசாமி, எடிட்டிங் ஈஸ்வரமூர்த்தி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். தயாரிப்பு சைலேந்திர சுக்லா, இணைத் தயாரிப்பு சரவணன்.

போதையில்லா உலகம் உருவாக்க வருகிறது “பெட்டர் டுமாரோ”!

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *