கொட்டுக்காளி
இயக்கம் – வினோத் ராஜ்
நடிகர்கள் – சூரி , அன்னபென்
தயாரிப்பு – சிவகார்த்திகேயன்
ஒரு பெண் கல்லூரியில் யாரையோ காதலித்து அது வீட்டிற்கு தெரிந்து பெரிய பிரச்சனை ஆகிறது. சூரி அண்ணபென்-யை திருமணம் செய்ய வேண்டும் என்று சிறு வயதிலிருந்து காத்திருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணை ஒரு சாமியாரிடம் அழைத்து சென்று அவரை சரி செய்து திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். இதற்காக சூரி குடும்பம் மற்றும் அவருடைய நண்பர்கள் கிளம்ப இந்த பயணம் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
இந்தப் படம் ஒரு வழக்கமான கமர்சியல் படம் அல்ல முழுக்க முழுக்க ஒரு சினிமா ரசிகர்களுக்காக எடுக்கப் பட்ட படம் ஆனால் இந்தப் படம் அனைவரிடமும் சேர்வதற்கு காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் , அவர் தான் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்,
இந்தப் படத்தில் நடிகர் சூரி முற்றிலும் மாரு பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக சூரி வந்து கொண்டிருக்கிறார், அதற்கு காரணம் சமீபத்தில் அவர் நடித்து வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்றார், இந்தப் படம் அவரின் நடிப்புக்கு பெரும் தீனியாக இருந்தது, எப்படி இப்படி அவரது பாதை மாறியது என்பது ஒரு ஆச்சர்யம் தான், இந்த படத்தில் அவரது குரல் வித்தியாசமாக இருக்கும் அதற்கு மிகுந்த மெனக்கெடல் போட்டுள்ளார்,
படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை அன்னபென் நடித்துள்ளார், மலையாள நடிகை என்ற தோற்றம் இல்லாமல் சாதாரண மதுரை பெண்ணாக நடித்து அப்படியே வாழ்ந்துள்ளார், படமே இவரை சுற்றி தான் நடிக்கிறது, அதனை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்துள்ளார், சூரி மற்றும் அண்ணபென் தாண்டி மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் புது முகங்கள் தான் சொல்ல போனால் அந்த ஊர் மக்களை தான் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர் வினோத் , அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் அதற்கு பெரிய பாராட்டுகள்,
படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிடையாது, இது பெரிய ரிஸ்க் தான் என்றாலும் இயக்குனர் அதை சிறப்பாக கையாண்டுள்ளார், அதற்கு முக்கிய காரணம் ஒலி வடிவமைப்பாளர் அவருக்கு தான் படத்தில் மிகப்பெரிய வேலை , நேச்சுரல் ஒலி கொண்டு இந்தப் படத்தை கடத்தியுள்ளார், லைவ் சிங்க் என்பதால் ஒளிப்பதிவாளருக்கு தான் பெரிய வேலையே எங்கு ஆரம்பிக்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் பெரிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளார் ஆனால் படம் சிறப்பாக வந்துள்ளது,
கிராமப் புறங்களில் ஒரு சாதாரண பெண்ணின் மீதி திணிக்கப்படும் அடுக்கு முறையும் அந்த மக்களின் அறியாமையும் இயக்குனர் முக்கிய கருவாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார், மனிதர்களுக்கு இடையே நிகழும் வெறுப்பு விரோதம் வன்மம் என அத்தனை உணர்ச்சிகளையும் இந்தப் படத்தில் இயக்குனர் வெளிக்கொண்டு வந்துள்ளார் , இந்தப் படம் அனைவருக்கும் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் , கண்டிப்பாக சினிமா ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்,
மொத்தத்தில் இந்த ‘ கொட்டுக்காளி ‘ ஒரு அடங்காபெண்ணின் கோவம்.
Rating 3/5