சத்தமின்றி முத்தம் தா – திரில்லர் தான் ஆனால் தலைப்புக்கேற்ற படமாக இருக்கும் – இயக்குநர் ராஜ்தேவ்.
ஸ்ரீகாந்திற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் – இயக்குநர் ராஜ்தேவ்.
ஸ்ரீகாந்திற்கு இணையாக நடித்திருக்கும் ஹீரோயின் – சத்தமின்றி முத்தம் தா பட இயக்குநர் ராஜ்தேவ்.
ஸ்ரீகாந்த் சார் தான் அர்த்தம் சொன்னார் – சத்தமின்றி முத்தம் தா பட நாயகி பிரியங்கா திம்மேஷ்
செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில், ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ் தேவ் இயக்கியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ” சத்தம் இன்றி முத்தம் தா “. மார்ச் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
நாயகி பிரியங்கா திம்மேஷ் பேசியதாவது…,
இந்தப் படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது திடீரென்று நடந்த ஒரு விஷயம். முதல் நாள் எனக்கு போன் செய்து இந்தப் படத்தைப் பற்றிச் சொன்னார்கள் அடுத்த நாள் நான் சென்னை வந்து இந்த படத்தில் கலந்து கொண்டேன் ,இதற்கு முதலில் நான் ஶ்ரீகாந்த் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும், இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திற்குத் தேவையான உழைப்பைக் கண்டிப்பாகக் கொடுப்பேன் என்று சொன்னேன் , சொன்னதைச் செய்துள்ளேன் என்று நம்புகிறேன் , இந்தப் படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் இந்த படத்திற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.
இசையமைப்பாளர் ஜுபின் பேசியதாவது…
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி, ஆனந்த் சார் தான் நான் இந்தப் படத்தில் பணியாற்ற மிக முக்கிய காரணம் அவருக்கு மீண்டும் எனது நன்றி, இதுவரை நான் பணியாற்றிய படங்களுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் மிக நன்றாக வந்துள்ளது , அதில் ஒரு பாடல் ஆண்ட்ரியா பாடியுள்ளார், பாடலாசிரியர் நல்ல வரிகளைக் கொடுத்துள்ளார் அதற்கு நன்றி, படம் ஆரம்பத்தில் பரபரப்பாக இருந்தாலும் முடிவு உங்களைக் கண்கலங்க வைக்கும் , ஶ்ரீகாந்த் சாரினால் இன்று இங்கு வர முடியவில்லை ஆனால் இந்தப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். மொத்த குழுவுக்கும் எனது வாழ்த்துகள் நன்றி.
இயக்குநர் ராஜ்தேவ் பேசியதாவது…,
இந்தப் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை த்ரில்லராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அது போலத்தான் எழுதவும் ஆரம்பித்தேன், மிகவும் சிரமமாக இருந்தது, இந்தப்படத்திற்காக நடிகர்களைத் தேர்வு செய்யும்போது இது போன்ற கதைகள் கொண்ட படங்களில் நடிக்காதவர்களைத் தான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன், அப்படித்தான் ஶ்ரீகாந்த் சாரை சந்தித்து இந்த படத்தைப் பற்றிப் பேசினேன். அனைத்து நடிகர்களையும் அப்படித்தான் தேர்வு செய்தேன். படம் முழுக்க முழுக்க திரில்லாரகவே இந்தப் படம் இருக்கும். கதாநாயகியும் சிறப்பாக நடித்தார். ஹீரோவுக்கு நிகராக இந்தப் படத்தில் நடித்தார், இசையமைப்பாளரும் நானும் நிறைய டிஸ்கஸ் செய்தோம், படத்தில் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக உங்கள் இருக்கை நுனியில் அமர வைக்கும். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.
பின் பத்திரிக்கியயாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், இயக்குநர் ராஜ்தேவ் கூறியதாவது….
இப்படம் டிரெய்லரில் சத்தம் அதிகமாக இருப்பது போல் தெரிந்தாலும் இது தலைப்புக்கேற்ற படமாகத் தான் இருக்கும் உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். இந்த விழாவிற்குச் சூழ்நிலை காரணமாகவே ஸ்ரீகாந்த் அவர்களால் வர முடியவில்லை. அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படத்தில் அவரது உழைப்பும், அர்ப்பணிப்பும் மிகப்பெரியது. அவர் படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் மிகப்பிடித்த படமாக இருக்கும் என்றார்.
பத்திரிக்கியயாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், நாயகி பிரியங்கா திம்மேஷ் கூறியதாவது…,
முதலில் இயக்குநரிடம் இருந்து, கால் வந்தது, உடனே ஸ்ரீகாந்த் சாரிடம் இருந்தும் அழைப்பு வந்தது. அவர் தான் கதை பற்றி விவரித்துச் சொன்னார். எனக்கு கதை பிடித்திருந்தது. ஆனால் இயக்குநர் சொன்ன தலைப்பு புரியவில்லை ஸ்ரீகாந்த் சார் தான் அர்த்தம் சொன்னார். நான் தமிழ் கற்று வருகிறேன். தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் நிறையப் படங்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்தப்படம் எனக்கு இதுவரை செய்த படங்களிலிருந்து வித்தியாசமானதாக இருந்தது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜுபின் இசைக்கு பிரபல பாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதியுள்ளார்.
ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியா பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார் , ஹரிஷ் பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – யுவராஜ் .M
படத்தொகுப்பு : மதன்.G
நடன இயக்குனர் தினேஷ் நடன அமைப்பை பொறுப்பேற்க, ‘மிராக்கிள்’ மைக்கேல் சண்டை பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். பின்னணி பாடல்களை ஆண்ட்ரியா, M.M.மானசி, ஜித்தின் ராஜ் மற்றும் ரவி.G பாடியுள்ளனர்.
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு மேற்பார்வை – A.JPஆனந்த்
தயாரிப்பு – கார்த்திகேயன்.S
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – ராஜ் தேவ்.
இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பத்து விருதுகளுக்கு மேல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு ஆனந்த விகடன் மற்றும் சாவி இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார். மேலும் அவர் அமெரிக்காவில் நடைபெற்ற திரைக்கதை போட்டியில் அனைத்து நாடுகளும் கலந்து கொண்ட நிலையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கதைகளான ‘KISS DEATH மற்றும் A STRANGER IS WALKING BY’ஆகியவற்றிற்கு சொந்தக்காரர் ஆவார். அவை இரண்டும் அமெரிக்காவில் அச்சிடப்பட்டு வெளியானதோடு இணையத்தின் KINDLE லும் பதிவேற்றப்பற்றுள்ளது.
மாறுபட்ட திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள இப்படம் தமிழகமெங்கும் மார்ச் 1 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது.