Rating 3/5
சாலா
இயக்கம் – எஸ் டி மணிபால் ,
நடிகர்கள் – தீரன், ரேஷ்மா வெங்கடேஷ், சார்லஸ்
இசை – தீசன்
தயாரிப்பு – டி ஜி விஸ்வ பிரசாத்
ஒருவன் மதுபானபார் ஒன்றை எடுத்து நடத்தி வருகிறான், அதே ஊரில் ஒரு பெண் மதுவை ஒழிக்கும் எண்ணத்தில் பல போராட்டங்களை நடத்தி வருகிறார், இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது, அந்த மோதல் பின் காதலாக மாறுகிறது, இந்த சமயத்தில் ஒரு பார் ஒன்றை லீசுக்கு எடுக்க முயற்சி செய்கிறான் , அதே பாரை வில்லன்கள் குழு ஒன்று எடுக்க முயற்சி செய்கிறது, இந்த நிலையில் அந்த இருவரில் யாருக்கு அந்த பார் கிடைத்தது, அதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை,
இந்தப் படத்தின் நாயகனாக தீரன் நடித்துள்ளார், சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், நாயகனாக இதுவே முதல் படம் , நல்ல கட்டுமஸ்தான உடம்பு நல்ல உயரம் என ஒரு கதாநாயகனுக்கு தேவையான தோற்றத்தை கொண்டுள்ளார், அது மட்டுமில்லாமல் காதல் மட்டும் சண்டை காட்சியில் சிறப்பாக நடித்தும் ரசிகர்களை கவர்கிறார், இதே போல நடித்தால் பெரிய நாயகனாக வளம் வர வாய்ப்புள்ளது ,
இந்தப் படத்தில் ரேஷ்மா வெங்கடேஷ் நாயகியாக நடித்துள்ளார், ஒரு முற்போக்கு போராளியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார், பெரிய காதல் காட்சிகள் இல்லையென்றாலும் தனக்கு கொடுத்த காட்சியை அழகாக நடித்து மக்களை கவர்ந்துல்லார், சார்லஸ் வினோத் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், வழக்கமான தன் நடிப்பை இந்தப் படத்திற்கு கொடுத்துள்ளார்,
படம் முழு கமர்ஷியலாக எடுக்கப்பட்டிருக்கிறது, அதற்கேற்ப தீசன் பாடல்கள் மக்களை எண்டர்டெயின் செய்துள்ளது, பின்னணி இசை கதை நகர்வுக்கு பெரிதும் உதவியுள்ளது, இந்தப் படத்தில் முக்கிய பணி ஒளிப்பதிவாளருக்கு தான், அதை சிறப்பாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குரு , ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான கலர் மற்றும் கோர்வையை படத்தொகுப்பாளர் புவன் சிறப்பாக செய்துள்ளார் ,
இந்தப் படத்தில் மேலும் சில முக்கிய கதாபாத்திரத்தில் ஶ்ரீநாத், அருள்தாஸ், சம்பத்ராம் ஆகியோர் நடித்துள்ளனர், அவர்களும் படத்திற்கு ஒரு தூணாக நின்று படத்தை எடுத்து சென்றுள்ளனர்,
மதுவின் தீமைகள் பற்றி அறிவுரையாக படம் எடுக்காமல் அனைத்து மக்களும் ரசிக்கும் ஒரு கமர்சியல் படத்தை எடுத்து அதில் மக்களுக்கு தேவையான கருத்தை இயக்குனர் சொல்ல முயற்சி செய்துள்ளார் அதற்கே இயக்குனர் எஸ் டி மணிபாலிற்கு பெரிய வாழ்த்துக்கள், படம் நகைச்சுவையாக சென்றாலும் ஆங்காங்கே நம்மளை சிந்திக்கவும் செய்துள்ளார், சில காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தது அதிலும் குறிப்பாக இறுதி விபத்து காட்சி, அதை எடுக்க பெரிய அனுபவம் தேவைப்படும் ஆனால் இயக்குனர் அதை சிறப்பாக செய்து விட்டார்,
மொத்தத்தில் இந்த ‘ சாலா ‘ ஒரு கமர்சியல் அறிவுரை
Rating 3/5