ஜமா
இயக்கம்: பரி இளவழகன்
நடிகர்கள்: பரி இளவழகன், அம்மு அபிராமி, சேதன்
இசை: இளையராஜா
தயாரிப்பு – learn and Teach production
தெருக்கூத்தில் பல வேடங்களை கட்டி மக்களை மகிழ்ச்சி அடைய செய்யும் ஒரு கலைஞர் தன் திறமையை மக்களிடம் எடுத்துக்காட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடு படுகிறான், அது மட்டுமில்லாமல் பிற்காலத்தில் அந்த தெருக்கூத்து ஜமா விற்கு தலைமை ஆசிரியாக இருக்க வேண்டும் என்கிற ஆசையும் அவனுக்குள் இருக்கிறது, இதனை கண்டு பாராட்டாமல் அவனை தாழ்த்தும் முயற்சியில் அந்த ஜமாவின் தலைவர் இருக்கிறார், அவர் அவனை புரிந்து கொண்டாரா இல்லை அவன் அங்கிருந்து விலகி சென்றானா என்பதே படத்தின் மீதிக்கதை
பல காலமாக தெருக்கூத்து போன்ற கலை படங்களில் அந்த மக்களின் சொந்த வாழ்க்கை கஷ்டம் மற்றும் அவர்களது வலியை தான் அதிகம் காட்டியுள்ளனர் , ஆனால் இந்தப் படத்தில் அது மிகவும் குறைவாக இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, தெருக்கூத்து பற்றிய ஒரு டாக்குமெண்டரி போல இருந்தது இந்தப் படம்,
இந்தப் படத்தில் இயக்குனர் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அது படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது, தான் சொல்ல வந்ததை தனது நடிப்பின் மூலம் தெளிவாக சொல்லியிருக்கிறார், முதல் படம் போல இல்லாமல் ஒரு தேர்ந்த நடிகராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் என்பது பெரிய ஆச்சர்யம் தான், பெண் வேடம் அர்ஜூனன் வேடம் என அனைத்து வேடங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் பதிந்து விட்டார்,
மேலும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் சேதன் நடித்துள்ளார், அவர்தான் அந்த ஜமா விற்கு தலைமை அதிகாரி , ஒரு தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற பொறுப்பை உணர்ந்து இந்தப் படத்தில் நடித்துள்ளார், சேதனின் நடிப்பு இந்தப் படத்தில் கச்சிதமாக இருந்தது, இது போன்ற பல கதாபாத்திரங்களில் அவர் நடிக்க வேண்டும், மேலும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார், கடந்த காலத்தில் அவர் கதை தேர்வு விசித்திரமாக இருக்கிறது, தண்டட்டி படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதே போல இந்தப் படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிரார், எதார்த்தமான பெண் போன்ற நடிப்பு அவருக்கு பெரிய பலமாக இருக்கிறது,
இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளது படத்திற்கு மிகப்பெரிய பலம் , ஏனென்றால் இளையராஜா வை விட தெருக்கூத்து பற்றி தெரிந்தவர் இருக்க மாட்டார், தனது எளிமையான இசையால் தெருக்கூத்து நிகழ்வை அப்படியே நம் கண் முன் நிறுத்தியுள்ளார், படத்தின் கலை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும், அவரது கலை வடிவமைப்பு சிறப்பாக இருந்தது, சொல்ல போனால் படம் பார்க்கும் உணர்வே நமக்கு இல்லாததை போல தத்ரூபமாக வடிவமைத்துள்ளார், அதே போல ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணா ஒரு ரசிகரின் கோணத்தில் இருந்து பார்க்குமாறு காட்சிகளை வடிவமைத்துள்ளார்,
பல படங்கள் தெருக்கூத்து பற்றி பேசியுள்ளது , ஆனால் இந்தப் படம் கண்டிப்பாக அதில் தனித்து விளங்கும் , குறிப்பாக இயக்குனர் பரி இளவழகன் கண்டிப்பாக இந்தப் படத்திற்கு பின்னர் கவனிக்கப்படும் ஒரு இயக்குனராக இருப்பர், மனிதர்களின் உணர்வுகளை சிறப்பாக கையாண்டுள்ளார், இயக்குனர் மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் இந்தப் படத்தில் சிறந்து விளக்கியுள்ளார், தெருக்கூத்து ரசிகர்களை கண்டிப்பாக இந்தப் படம் பூர்த்தி செய்யும்,
மொத்தத்தில் இந்த “ஜமா” ஒரு கலைஞனின் வெற்றி
Rating 4/5