டெவில் படம் எப்படி இருக்கு?

டெவில்

இயக்கம் – ஜி ஆதித்யா
நடிகர்கள் – விதாரத் பூர்ணா
இசை – மிஷ்கின்
தயாரிப்பு – ராதா கிருஷ்ணன்

விதாரத்துக்கும் பூர்ணாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் ஒரு புரிதலே ஏற்படவில்லை. நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவை விலகி விலகி செல்கிறார் விதார்த். இதனால் விரக்தியடைந்த பூர்ணா ஒரு விபத்தில் இன்னொரு நாயகன் திரிகுன்னை சந்திக்க நேர்கிறது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத உறவு மேம்படுகிறது. அது நாளடைவில் காதலாக மாறுகிறது. இதற்கிடையே விதார்த் இன்னொரு நாயகி சுபஸ்ரீ உடன் காதல் தொடர்பில் இருக்கிறார். ஒரு நாள் விதார்த் தன் காதலியுடன் இருக்கும் பொழுது பூர்ணாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இன்னொரு புறம் பூர்ணா தன் காதலன் உடன் இருக்கும் பொழுது விதார்த்திடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இதையடுத்து இருவருக்குள்ளும் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பதை டெவில் படத்தின் கதை.

தடுமாற்றம் படம் முழுக்க தெரிகிறது. படத்தின் இறுதி பதினைந்து நிமிடங்களை நம்பி மொத்தக் கதையையும் எடுத்திருக்கிறார்கள். அந்த இறுதி பதினைந்து நிமிடங்கள் உண்மையில் கொஞ்சம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஆனால் அது மட்டும் படத்திற்கு போதுமா ?

படத்தின் உருவாக்கம் ஒரு டிவி நாடகத்தை பார்ப்பது போன்றே எடுக்கப்பட்டு இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலத்திலும் இவ்வளவு பின்தங்கிய படத்தை மிஷ்கின் குழுவில் இருந்து எதிர்பார்க்கவில்லை.

மிஷ்கின் முதன்முதலாக இசையமைத்திருக்கும் படம், ரசிக்கும் படி உள்ளது.சில இடங்களில் வயலின் வைத்து ஒப்பேற்றி விட்டால் போதும் என்று நினைத்திருக்கிறார். இனிமேல் இசையை விட்டுவிட்டு , இயக்கத்தில் கவனம் செலுத்தலாம்

படத்தின் மிகப்பெரிய பிளஸ் இடைவேளைக்கு பிற்பாடு நடக்கும் கொலையும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் தான். இதை படத்தின் ஆரம்பத்திலேயே காட்டி, அதிலிருந்து கதையை கதையை கொண்டு சென்றிருந்தால் படம் வேறொரு தளத்தில் இயங்கி இருக்கும்.

மொத்தத்தில் டெவில் ஒரு மனிதனுக்குள் மறைந்திருக்கும் டெவிலை காட்ட முயற்சி செய்துள்ளது,

Ratiing 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *