*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் *தளபதி** அவர்களின் அறிவுறுதலின்படி,
சற்றுமுன்…
78-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு.!
தமிழக வெற்றிக் கழகம் தென்சென்னை மாவட்ட மகளிரணி சார்பாக தி.நகரில் கழக பொதுச்செயலாளர் திரு.என். ஆனந்த் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு மூன்று சக்கர வண்டி, முதியோர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவு தூய்மை பணியாளர்கள் உட்பட 500 பேருக்கு புடவை மற்றும் ஹாட் பாக்ஸ் ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி திரு. அப்புனு மற்றும் தென்சென்னை மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் திருமதி.வனிதா, திருமதி.வேளாங்கண்ணி, திருமதி.கஸ்தூரி, திருமதி. புவனேஸ்வரி, திருமதி.மரகதவள்ளி, திருமதி.காயத்திரி மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.