நேற்று இந்த நேரம்
இயக்குனர் : சாய் ரோஷன்
நடிகர்கள் – சாரிக் ஹாசன் , ஹரிதா, மோனிகா ரமேஷ்
இசை : கெவின் என்
தயாரிப்பாளர்கள் : கிளாபின் ஃபில்மோடெயின்மெண்ட் – கே ஆர் நவீன் குமார்,
ஒரு நண்பர்கள் குழு ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர், அதில் சில காதல் ஜோடிகளும் உள்ளனர் இந்நிலையில் , சுற்றுலா சென்ற இடத்தில் காதலர்களுக்கு இடையே சண்டை வருகிறது, அது போல நண்பர்களுக்குள்ளும் வாக்கு வாதம் ஏற்படுகிறது, அந்த சூழலில் அந்த கும்பலில் ஒருவன் காணாமல் போய் விடுகிறான், அவனை தேடி பார்த்து கிடைக்காததால் போலீஸிடம் சென்று இதனை கூறுகின்றனர் , இந்த சமயத்தில் இன்னொருவரும் தொலைந்து விடுகிறான் , அதன் பின் மற்றவர்களை விசாரிக்கும்போது சில விஷயங்கள் தெரிய வருகிறது, இதன் பின் என்ன ஆனது அவர்கள் கிடைத்தார்களா என்பதே இப்படத்தின் மீதிக்கதை,
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் சாரிக் ஹாசன் நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக ஹரிதா நடித்துள்ளார், படத்தில் மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் புது முகம்தான்,
ஒருவரை பற்றி ஒவ்வொருவருக்கும் பல பார்வை இருக்கிறது , அதனால் மற்றவர்களுக்கு அது எப்படி மாறுகிறது ஒவ்வொருவரின் உண்மையான பின்னணி என்பதை வித்தியாசமான முறையில் எடுத்துள்ளார் இயக்குனர்,
சாரிக் ஹாசன் இந்தப் படத்தில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அவரது நடிப்பு இந்தப் படத்தில் பெரிதும் உதவியாக படத்தை தாங்கி பிடிக்கிறது , மற்ற கதாப்பாத்திரங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர் , குறிப்பிடும்படியாக எந்தக் கதாபாத்திரமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை,
முன்னும் பின்னும் கதை ஓட்டம் மற்றும் ஒவ்வொருவரின் பின்னணி என திரைக்கதை அமைந்துள்ளது, படத்தின் திரைக்கதை இந்தப் படத்திற்கு பலமாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் சலிப்படைய செய்தது , திருப்பங்களை சொல்லும் நேரம் மிகவும் தாமதமாக உள்ளதால் பொறுமை இழக்க நேரிடுகிறது, இன்னும் திரைக்கதையை சற்று வேகமாக நகர்தீருந்தால் படம் இன்னும் ஒரு படி சென்றிருக்கும்,
இந்தப் படத்திற்கு கெவின் இசையமைத்துள்ளார் , அவரது இசையில் பாடல்கள் கதையை நகர்த்திச் செல்ல பெரிதும் உதவியாக இருந்தது, பின்னணி இசை பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை , படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை விஷால் கொடுத்துள்ளார், இரவு நேர காட்சிகள் மற்றும் சில இடங்களில் லாஜிக் மிஸ் ஆனது,
சுற்றுலா தலங்களை மையமாக வைத்து மலையாளத்தில் மஞ்சுமால் பாய்ஸ் ஒரு மிகப்பெரிய வெற்றியை கண்டது , இந்தப் படமும் அதே போல ஒரு சுற்றுலா தளத்தில் நடக்கும் நிகழ்வாக இந்தப் படம் அமைந்துள்ளது,
மொத்தத்தில் ” நேற்று இந்த நேரம்” நேரத்தை சற்று குறைத்திருந்தால் முக்கியமான த்ரில்லர் படமாக பேசப்பட்டிருக்கும்.
Rating 3/5