பகலரியான்
இயக்கம் – முருகன்
நடிகர்கள் – வெற்றி , அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன்,
இசை – விவேக் சரோ
தயாரிப்பு – ரிஷிகேஷ் எண்டர்டெயின்மண்ட் – லதா முருகன்
ஓருவன் சிறு வயதில் தனது அப்பாவை கொலை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர். சிறு சிறு அடிதடி வேலைகளை தனது நண்பனோடு சேர்ந்து செய்து வருகிறார். ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் . இருவரும் காதல் செய்தாலும் கொலை செய்த காரணத்தால் தந்தை மகளை வெற்றிக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார். வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறார்கள். இரவு கடந்ததும் மறுநாள் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் இந்நிலையில் நாயகனை கொலை செய்ய ஒரு கும்பல் பின் தொடர்கிறது, இதிலிருந்து தப்பித்தானா காதலியை மனந்தாரா என்பது தான் படத்தின் மீதிக்கதை,
நாயகன் வெற்றி தான் தேர்வு செய்யும் கதாபாத்திரத்துக்கு பெயர் போனவர், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பார் , இந்தப் படத்தில் மிரட்டலான லுக்கில் ஒரு ரவுடி கதாபாத்திரமாக மாறி கதைக்கேற்ற நாயகனாக ஜொலித்திருந்தார். ஒரு சில இடங்களில் இன்னும் கொஞ்சம் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றினாலும், பெரிதான குறை சொல்லும்படியாக எதுவும் செய்யவில்லை நாயகன் வெற்றி.
இந்தப் படத்தில் அக்ஷயா கந்தமுதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார், வழக்கமாக ஒரு காதல் நாயகியாக இந்தப் படத்தில் வளம் வருகிறார், வில்லனாக தோன்றிய இயக்குனர் முருகன், அக்கதாபாத்திரமாக மாறி மிரட்டியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். இவர் வில்லனா அல்லது ஹீரோவா என்று சொல்லும் அளவிற்கான கதாபாத்திரம் இவரோடது. க்ளைமாக்ஸ் காட்சியில் தனது தங்கை மீதான பாசத்தை வெளிக்காட்டும் இடத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
இப்படத்திற்கு விவேக் சரோ இசையமைத்திருக்கிறார் . பாடல்கள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை ஆனால் பின்னணி இசை கைகொடுத்துள்ளது, இந்தப் படத்திற்கு அபிலாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் . படத்திற்கு தேவையான அளவு உழைப்பை கொடுத்துள்ளார், சில காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டது,
ஒரு விரக்தியில் ஒரு கொலையை செய்து விட்டு அதன் பின்னர் அதற்காக பல சிக்கல்களை அனுபவிக்கும் பல மனிதர்களின் வாழ்க்கையை மையகக்கருத்தாக கொண்டு இந்தப் படத்தை இயக்குனர் உருவாக்கியுள்ளார், அதிலிருந்து விடுபட சரியான பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்பதே இயக்குனரின் இறுதி கருத்தாக உள்ளது,
மொத்தத்தில் இந்த ‘ பகலரியான் ‘ ஒரு பாடம்
Rating 3/5