படிக்கக்கூடாத பக்கங்கள்
இயக்குனர் – செல்வன் மாதப்பன்
நடிகர்கள் – யாஷிகா ஆனந்த், பிரஜன் , ஜார்ஜ் மரியன்
இசை – ஜெஸ்ஸி
தயாரிப்பு – செல்வன் முத்துக்குமார்
ஒரு நடிகை படப்பிடிப்பிற்காக சேலம் ஏற்காடு பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்க வருகிறார். அவரை பேட்டி எடுக்க ஒரு லோக்கல் சேனலில் இருந்து ஒரு ரிப்போர்ட்டர் வருகிறார். பேட்டி தொடங்கியதும் குதர்க்கமான கேள்விகளைக் கேட்டு அந்த நடிகையை கோபப்படுத்துவதோடு அவரை அடித்து துன்புறுத்த துவங்குகிறார். இப்படி ஒரு வித்தியாசமான கோனத்தில் தான் கதை தொடங்குகிறது , இதற்கு பின் என்ன ஆனது அவர்கள் ஏன் அந்த நடிகிய மீது கோவப்படுகிறார்கல் மேற்கொண்டு என்ன நடந்தது என்பது “படிக்காத பக்கங்கள்” படத்தின் மீதி கதை.
நடிகை ஸ்ரீஜாவாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படமாக தெரிகிறது. படத்தின் மொத்த பாரமும் யாஷிகாவின் தலையில் தான் வைக்கப்பட்டுள்ளது அவரும் அதை உணர்ந்து அவரால் முடிந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகன் பிரஜன் ஏதோ கெளரவ தோற்றத்தில் வருபவர் போல் இரண்டாம் பாதியில் தலைகாட்டி, க்ளைமாக்ஸில் சம்பிரதாய சண்டை போட்டு படத்தை முடித்து வைக்கிறார்.ஜார்ஜ் மரியம் நாயகிக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வந்து போகிறார் என்றே சொல்லலாம்.
படத்தின் மிகப்பெரிய பலவீனம் வில்லன் நடிகர்களின் கூட்டம், பேட்டி எடுக்க வருபவரும் அவருக்குப் பின்னணியில் இருக்கும் வில்லன் கூட்டமும் காமெடி அடியாட்கள் தோற்றத்தில் இருந்து கொண்டு சைக்கோ வில்லனுக்கான வசனங்களைப் பேசுவதை ஜீரணிக்க முடியவில்லை. அந்த கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரின் நடிப்பும் படு செயற்கையாக நாடகத்தன்மையுடன் இருக்கிறது.இன்னும் எத்தனை நாள் தான் பணம் கொடுத்துவிட்டால் தங்களின் வீடியோக்களை சம்பந்தப்பட்டவர்கள் அழித்துவிடுவார்கள் என்று பெண்கள் நம்புவது போல் படம் வரப்போகிறதோ தெரியவில்லை.
இந்தப் படத்திற்கு டாலி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் விறுவிறுப்புக்கு தேவையானதை சரியாகக் கொடுத்துள்ளார், சில காட்சிகளில் இயற்கை அழகு சிறப்பாக இருந்தது, இந்தப் படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனினும் பிண்ணனி இசை பட ஓட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளது,
படத்திற்கு தேவையான கதை இருந்தும் அதனை திரைக்கதையில் சிறப்பாக்க இயக்குனர் தவறி விட்டார், ஒரு சஸ்பென்ஸ் படத்திற்கு தேவையான அத்தனை அம்சமும் கதையில் இருக்கிறது , ஆனால் காட்சிகளில் பெரிதாக விறுவிறுப்பு இல்லாத காரணத்தால் படம் மெதுவாக நகர்கிறது, சில தேவையற்ற காட்சிகளை நீக்கியிருக்கலாம், அப்படி செய்திருந்தால் ஒரு நல்ல சஸ்பென்ஸ் படமாக வந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த ‘படிக்கக்கூடாத பக்கங்கள்’ பார்க்ககூடியதா என்பதை ரசிகர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்
Rating 3/5