பிரேமலு
இயக்குனர் : கிரீஸ் ஏ டி
நடிகர்கள் – மமிதா பைஜு, நஸ்லின், மேத்தீவ் தாமஸ்
இசை : விஷ்ணு விஜய்
தயாரிப்பாளர்கள் : பஹத் பாசில்
ஒரு இளைஞன் கல்லூரி படிப்பு முடிந்ததும் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறான் , அதுவரை தந்தையின் பேக்கரியில் டோர் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறான் , அவனுக்கும் அவன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் ஒத்துப் போகாததால் தான் அவன் வெளி நாடு செல்லவே நினைக்கிறான், இந்நிலையில் அவன் அப்பிளை செய்திருந்த விசா ரத்து ஆகிவிடுகிறது, அடுத்த விசா வர 6 மாதம் ஆகும் என்பதால் வீட்டிலிருந்து தப்பிக்க தனது நண்பனுடன் கேட் படிக்க ஹைதராபாத் செல்கிறான் , அங்கு அவனுக்கு பாடம் எடுக்கும் அவரது சாரின் திருமணத்தில் கலந்து கொள்ள செல்கிறான், அங்கு ஒரு பெண்ணை காண்கிறான் அந்தப் பெண் மீது காதல் வயப்படுகிறார் , அந்தப்பொண்ணும் இவனும் ஒரே ஊர் என்பதால் இருவரும் நண்பர்களாக பயணிக்கின்றனர் , ஆனால் அந்தப் பெண் அவனை விட 1 வயது மூத்தவள் , இதன் பின் என்ன ஆனது அவன் காதலில் வெற்றி பெற்றானா , வெளிநாடு சென்றானா என்பதே மீதப்படம்,
தமிழ் சினிமா தற்போது இந்த மாதிரியான படங்களை தான் தவற விட்டு விட்டது
இந்தப் படத்தின் கதையில் ஒரு 100 படத்தை பார்த்திருப்போம் ஆனால் படம் பார்க்கும்போது ஒரு இடம் கூட நமக்கு சலிப்படைய வில்லை ,
மலையாள சினிமாவிற்கு இந்த மாதம் பெரிய வசூல் வேட்டை தான் , ஒரு பக்கம் பிரம்மயுகம், மஞ்சும்மெல் பாய்ஸ் என வசூலில் சாதனை படைத்து வர இந்தப் படம் சத்தமில்லாமல் 100 கோடி சாதனை நிகழ்த்தியுள்ளனர் , இப்போது தமிழில் இதனை டப்பிங் செய்து வெளியிடுகிறது ரெட் ஜெயன்ட் நிறுவனம் ,
இந்த படத்தில் நடித்துள்ள அத்தனை நடிகர்களும் இளம் நடிகர்கள் அதிக அனுபவம் இல்லாதவர்கள் ஆனால் படத்தில் அவர்கள் நடிப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும், தமிழில் பல நடிகர்கள் இவர்களிடமிருந்து நடிப்பை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறலாம்,
படம் முழுக்க நகைச்சுவை தான், பஞ்சமில்லாமல் சிரிக்கலாம் , இந்தப் படத்தின் நாயகியாக நடித்த மம்தா பைஜு கதாப்பாத்திரத்தை அழகாக உள்வாங்கி நடித்துள்ளார் , நமக்கு படம் பார்க்கும் உணர்வே இருக்காது, சிறு பட்ஜெட்டில் இப்படி ஒரு படத்தை எடுத்தது ஆச்சர்யம் தான்,
ஒரு பெண் தன்னுடைய காதலையும் கல்யாணத்தையும் ஒரு வரைமுறைக்கு கொண்டு வரலாம் ஆனால் இறுதியில் அந்தக் காதல் கல்யாணம் எதிர்பார்க்காத ஒருவரின் மீது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் தோன்றும் என்பதை அழகாக காட்டியுள்ளார்,
படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் ஸ்கோர் செய்துள்ளனர் , குறிப்பாக நண்பராக நடித்த சங்கீத் பிரதாப் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அந்த கதாபாத்திரம்
மொத்தத்தில் இந்த பிரேமலு தவிர்க்க கூடாத ஒரு மலையாள நகைச்சுவை சினிமா
Rating 4/5