பூமர் அங்கில் படம் எப்படி இருக்கு?

பூமர் அங்கில்

இயக்குனர் : ஸ்வதேஷ் எம் எஸ்
நடிகர்கள் – யோகி பாபு , ஓவியா , தங்கதுரை
இசை : சந்தன் & தர்ம பிரகாஷ்
தயாரிப்பாளர்கள் : Anka media

ரஷ்ய நாட்டு பெண்ணை ஒருவன் திருமணம் செய்து கொள்கிறான், அந்த பெண்ணை விவாகரத்து செய்ய நினைக்கிறான், ஆனால் ஆதில் ஒரு சிக்க ஏற்படுகிறது , விவாகரத்து வேண்டுமென்றால் அவரின் பூர்வீக அரண்மனையில் இருவரும் சில நாட்கள் வாழ வேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கின்றனர் , இதற்காக அந்த அரண்மனையில் இருவரும் தங்குகின்றனர், அதே சமயம் அந்த அரண்மனையில் அவர்களுடன் ஒரு குழு தங்க முயற்சி செய்கின்றனர் , இதன் பின். என்னானது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் ரஷ்ய நாட்டு பெண்ணை திருமணம் செய்யும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார், அங்கு வரும் ஒரு அழையா விருந்தாளியாக ஓவியா நடித்துள்ளார்,

வழக்கமான ஒரு காமெடி படமாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளனர், யோகி பாபு வழக்கமான தன் உடல் மொழி மற்றும் வசனங்களை பேசி நகைச்சுவை செய்துள்ளனர், அதில் ஒரு நடிகர் பட்டாளமே உள்ளது , அவர்களும் அதில் தங்களால் முடிந்த அளவு நகைச்சுவை செய்ய முயற்சி செய்துள்ளனர் ,

ஓவியா இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், படத்தில் சில ஆங்கில படங்களின் தோற்றத்தில் நடித்து நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்துள்ளார், அவருக்கும் யோகி பாபுவிற்கும் காட்சிகள் குறைவு தான் என்றாலும் அவரும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார், சேசு தங்கதுரை மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் படத்தை நகர்த்த செல்ல காமெடி செய்கின்றனர் ஆனால் oru சில இடங்களில் அது நம்மை சோதிக்கும் அளவில் தான் உள்ளது,

படத்தில் ரஷ்ய பெண்ணாக நடித்துள்ள பெண் மற்றும் யோகி பாபுவிர்கும் இடையே நடக்கும் காட்சிகள் சற்று நகைச்சுவையாக இருக்கிறது, ஆனாலும் கதையின் பின்னால் எதோ மர்மம் இருப்பது போல அவர்களின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது,

இந்தப் படத்தில் பாடல்கள் மற்றும் இசை இரண்டுமே பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இல்லை , பாடல்கள் படத்தை நகர்த்த மட்டுமே உதவியுள்ளது, பின்னணி இசைக்கும் பெரிதாக வேலை இல்லை, படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை சுபாஷ் கொடுத்துள்ளார், எந்த வித புது முயற்சியும் இல்லாமல் ஒரு சாதாரண படத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இதற்கு கொடுத்துள்ளனர்,

ஒரு அரண்மனையில் ஒரு குழு நடத்தும் தேடல்களை அதற்கான காரணங்களை கண்டு பிடிப்பதும் இந்தப் படமாக இருக்கிறது,

மொத்தத்தில் இந்த “பூமர் அங்கிள்” கொஞ்சம் பூமரான நகைச்சுவை

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *