பொன்னீலனின் கரிசல் நாவல் திரைப்படமாகிறது: திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன்

பொன்னீலனின் கரிசல் நாவல் திரைப்படமாகிறது: திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன்

கன்னியாகுமரி, நவ. 13: சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் முதல் நாவலான கரிசல் திரைப்படமாக தயாரிக்கப்பட உள்ளதாக திரைப்பட இயக்குநர் பி.சி.அன்பழகன் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மணிக்கட்டிப்பொட்டல் என்ற ஊரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பொன்னீலன். தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளியான இவர் நெல்லை மாவட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதை தொகுப்பு, வரலாற்று நூல்கள், நாவல்கள், கட்டுரைகள் என இவரது படைப்பு மிகச்சிறந்த எழுத்தாளராக எழுத்துலகுக்கு அடையாளம் காட்டியது.
இவரது முதல் சிறுகதைத் தொகுதி ஊற்றில் மலர்ந்தது என்ற பெயரில் 1978 இல் வெளிவந்தது. ஆயினும் பொன்னீலனை இலக்கிய கவன…
இந்நிகழ்வில் பொன்னீலன் பேசியது: நான் எழுதிய முதல் நாவலான கரிசல் நான்காண்டுகள் களப்பணி செய்து எழுதப்பட்ட நாவல். அதை தற்போது சினிமாவாக இயக்க விரும்பும் குமரி மாவட்டத்தை சேர்ந்த இயக்குநர் பி.சி.அன்பழகனுக்கு வாழ்த்துக்கள். தற்போது இளைய தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. நல்ல புத்தகங்கள் வரும் போது புத்தகக் கண்காட்சிகளில் அதை அதிகளவில் இளைஞர்கள், மாணவர்கள் வாங்கிச் செல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் செல்லிடப்பேசி, கணினி மூலம் எளிதாக வாசிக்க முடிகிறது. வாசிக்கும் தளங்கள் காலத்திற்கேற்ப மாறுபடுகிறது. புத்தகம் மிகச்சிறந்த வாசிப்புக் கருவி என்பது உண்மை என்றார் அவர். இந்நிகழ்வில் தமிழறிஞர்கள் எஸ்.பத்மநாபன், ஏ.எம்.டி.செல்லத்துரை, முதற்சங்கு ஆசிரியர் சிவனி சதீஸ், ஓட்டல் ஸ்பார்சா பொதுமேலாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *