ரகு தாத்தா படம் எப்படி இருக்கு?

ரகு தாத்தா

இயக்கம் – சுமன் குமார்
நடிகர்கள் – கீர்த்தி சுரேஷ், எம் எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி
இசை – ஷான் ரோல்டன்
தயாரிப்பு – கீர்த்தி சுரேஷ், ஹோம்பாலே ஃபிலிம்ஸ்

முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி இந்தியாவை ஆட்சி செய்து வரும் காலத்தில் வள்ளுவன்பேட்டை கிராமத்தில் இந்தி கற்றுக் கொடுக்கும் சபா இருக்கக் கூடாது என போராடி அதற்கு பூட்டுப் போடும் ஒரு பெண் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். வங்கியில் இந்தி படித்தால் தான் புரமோஷன் கிடைக்கும் என வங்கி அதிகாரி சொல்லும் போது, அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். க. பா எனும் பெயரில் ஆண் எழுத்தாளர் போல சிறுகதைகளையும் எழுதி வருகிறார். அவருக்கு ரசிகரும் உள்ளார். தாத்தாவுக்கு கொடிய நோய் ஏற்பட்ட நிலையில், சீக்கிரம் இறந்து விடுவார் என மருத்துவர் சொல்ல, அவருடைய கடைசி ஆசைகளில் ஒன்றாக பேத்தியின் திருமணம் இடம்பெறுகிறது. தன்னை புரிந்துக் கொண்டும் தனது பெண்ணிய கருத்துக்களை மதிக்கும் நபராக இருக்கும் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கிறாள், அந்தப் பெண் இந்தி கற்கிறார், இந்தி தேர்வு எழுதுகிறார், இந்தி சபாவை திறந்தே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் , இதன் பின் என்ன ஆனது அந்த சபா திறக்கப்ட்டதா என்பதே படத்தின் மீதிக்கதை,

தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் கதையாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் , மலையாளத்தில் வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தில் வரும் ஒரு சின்ன போர்ஷனை முழு படமாக எடுத்துள்ளார் இயக்குநர் என்பது போலத்தான் தோன்றுகிறது.

கீர்த்தி சுரேஷ் கயல்விழி என்ற
கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நிச்சயதார்த்த நிகழ்ச்சி மற்றும் படத்தின் கிளைமேக்ஸ் திருமண காட்சிகள் என அனைத்தும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது . கீர்த்தி சுரேஷை தாண்டி அவரது காதலனாக வரும் ரவிந்திர விஜய் சிறப்பாகவே நடித்துள்ளார். தாத்தாவாக எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ளார், அவருக்கே உரித்தான பாணியில் அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்,

வங்கி அதிகாரியாக நடித்துள்ள ராஜீவ் ரவிந்திரநாதன் தப்பு தப்பாக தமிழ் பேசும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலை அதிர்கிறது. தேவதர்ஷினி படத்திற்கு மேலும் ஒரு பக்கபலமாக இருக்கிறார்,. கீர்த்தி சுரேஷின் அண்ணன் மற்றும் அந்த 500 ரூபாய் லாரி அண்ணி கதாபாத்திரம் என சிறு சிறு கதாபாத்திரங்கள் படத்தை மேலும் ரசிக்க வைத்துள்ளார்கள் .

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது, இந்த நிலையில் படத்தில் அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தது, அதை விட பின்னணி இசை சரியாக பயன்படுத்தப்பட்டது, மேலும் இந்தப் படத்திற்கு யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார், இந்தப் படம் அவருக்கு முதல் படம் போல தெரியவில்லை அருமையாக காட்சிகளை வடிவமைத்துள்ளார், குறிப்பாக பழைய மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் உணர்வை வெளிப்படுத்தும் காட்சிகளை தத்ரூபமாக காட்டியுள்ளார் ,

இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம் என்பதை சொல்லியிருக்கின்றனர் . இந்தி திணிப்பு மட்டும் பெரிய விஷயமல்ல காலம் காலமாக பெண்கள் மீது கலாச்சாரம் எனும் பெயரில் நடத்தப்படும் ஆணாதிக்க திணிப்பு தான் கொடுமையானது என்பதை கடைசியாக சொல்லி படத்தை முடிக்கிறார் இயக்குனர் சுமன்.
இந்தி திணிப்பு பற்றிய படமாக ஆரம்பிக்கும் இந்த படத்தில் அதை பற்றிய அழுத்தமான கதையை சொல்லி அதை நகைச்சுவையாக கையாண்டுள்ளார் இயக்குனர்.

மொத்தத்தில் இந்த “ரகு தாத்தா” ஒரு நகைச்சுவை கலந்த அறிவு.

Rating 2.8/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *