ரசவாதி
இயக்கம் – சாந்தக் குமார்
நடிகர்கள் – அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் , ரேஷ்மா
இசை – தமன்
தயாரிப்பு – சாந்தகுமார்
ஒரு சித்த மருத்துவர் தன் கடந்த கால நாட்களில் நடந்த கசப்பான சம்பங்களை மறந்து ஒரு நிம்மதியான வாழ்வை தேடி கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் தனது சித்த வைத்தியத் தொழிலை பார்த்து வருகிறான், இந்நிலையில் அந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணும் அவனும் நண்பர்களாக இருக்கின்றனர், நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறுகிறது, இப்படி இருக்கையில் அவனது கடந்த கால வாழ்க்கை தற்போது அவனது வாழ்க்கைக்கு இடையூறு செய்கிறது, அவன் கடந்த காலம் என்ன என் அவனுக்கு இந்தப்பிரச்சனை அதிலிருந்து அவன் தப்பிதானா இல்லையா என்பதே இப்படத்தின் மீதிக்கதை,
இயக்குநர் சாந்தகுமாரின் முந்தைய படங்களான மௌன குரு மற்றும் மகாமுனி ஆகிய இரண்டு படங்களுக்கும் இடையில் மிகப்பெரிய கால அவகாசம் இருந்தது இந்தப் படம்தான் அவரது பட வரிசையில் விரைவில் வெளியான படம் , இயக்குனர் தான் சொல்ல வந்த கதைக்கான திரைக்கதையில் அரசியல், தத்துவம், சமூகம் சார்ந்த பல்வேறு விசயங்களை பேசுவது வழக்கம். அப்படி தான், இந்த படம் காதல் கதையாக இருந்தாலும், அரசியல், மருத்துவம், சமூக மாற்றம், இயற்கை உள்ளிட்ட விசயங்களைப் பற்றி பேசி அமைதியான சூழலை நம் மனதுக்குள் கடத்திவிடுகிறார்.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் இந்தப் படத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் , அவர் ஏற்கும் கதாபாத்திரங்கள் ஒரு இறுக்கமான மனநிலையில் இருக்கும் இந்த படத்திலும் அப்படிப்பட்ட வேடம் தான் என்றாலும், இதில் அதிகமான காதல் காட்சிகளில் நடித்து தனது இறுக்கத்துடன், ரசிகர்களின் இறுக்கத்தையும் போக்கியிருக்கிறார். ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கும் அர்ஜுன் தாஸ், பல இடங்களில் குறைவான வசனங்கள் பேசினாலும், பார்வையிலேயே தனது உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். ஆனால் அவர் இது போன்ற கதாபாத்திரங்களில் இருந்து வெளிவந்து கலகலப்பான கதைகளில் நடித்தால் தான் அவரது நடிப்பு மெருகெரும்,
மேலும் நாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், அளவுக்கு அளவான அழகோடும், நடிப்போம் ரசிகர்களை கவர்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ரேஷ்மா, பரதநாட்டிய நடனத்தில் தொடங்கி, தனது இல்லற வாழ்வின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காட்சி என தன் பார்வையாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுஜித் சங்கர், வில்லன் வேடமாக இருந்தாலும் தனது நடிப்பின் மூலம் ஹீரோ பக்கத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிடுகிறார். அவரது மேனரிசமும், வசன உச்சரிப்பும் வித்தியாசமாக இருந்தாலும், அவரது கதாபாத்திரத்தை தனித்துவமாக காட்டி கவனம் ஈர்த்துவிடுகிறது. ஜி.எம்.சுந்தர், ரம்யா சுப்ரமணியன், ரிஷிகாந்த் என்று மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக வந்து போகிறார்கள்.
தமன்.எஸ்-ன் இசையில் பாடல்கள் கதைக்களத்திற்கு ஏற்ப அமைதியாகவும், மனதை வருடுவதுபோலவும் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ரேஷ்மாவின் பரதநாட்டிய நடனத்திற்காக போடப்பட்டிருக்கும் பீஜியம் இனி கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் பட்டையை கிளப்பும் என்பது உறுதி.ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசு கொடைக்கானலின் அழகை மட்டும் இன்றி அங்கிருக்கும் அமைதியான சூழலுடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார்.
இயக்குனர் சாந்தகுமார் ஒரு காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு சமூக கருத்துகளை மக்களிடம் சொல்ல முயற்சி செய்துள்ளார், அவாது முந்தைய படங்களும் அப்படித்தான் இருக்கும் , ஆனால் இந்தப் படத்தில் திரைக்கதையில் எதோ மறைந்து விட்டது படம் அவரது பாணியில் இருந்து சற்று மாறியுள்ளது , படத்தில் நடக்கப் போகும் நிகழ்வுகளை நாமே சில இடங்களில் கண்டுபிடிக்கும் அளவில் உள்ளது , எனினும் அவரது மேக்கிங் மற்றும் நடிகர்களின் முயற்சி என படத்தை ஒரு முழு கலவையாக நம்மிடம் கொடுத்துள்ளது ,
மொத்தத்தில் ‘ ரசவாதி ‘ ஒரு காதல் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர்
Rating 3.4/5