ரணம் அறம் தவறேல்
இயக்குனர்- ஷெரிப்
நடிகர்கள் – வைபவ் , நந்திதா ஸ்வேதா, தான்யா, சுரேஷ் சக்கரவர்த்தி
இசை – மது நாகராஜன்
தயாரிப்பு – அரோல் கரோலி
எரிக்கப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள் தனித்தனியாக நகரின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. கை, கால், உடம்பு என அனைத்து பாகங்களையும் காவல்துறை சோதனை செய்கிறது. ஆனாலும் சோதனையில் எந்த பலனும் இல்லை, இந்த வழக்கு காவல் துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் நிலையில் நாயகன் வைபவ் உதவி செய்ய முன் வருகிறார்.இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்து வந்த இன்ஸ்பெக்டர் காணாமல் போகிறார். அதனால் தான்யா வைபவுடன் இணைந்து உண்மையை கண்டறிய முயற்சிக்கிறார். ஆனால் இந்த வழக்கு அவர்களுக்கே தண்ணி காட்டும் நிலையில் பல எதிர்பாராத உண்மைகளும் வெளிவருகிறது. இந்த கொலைகளை செய்தது யார்? இதன் பின்னணி என்ன என்பதே இந்தப்படத்தின் மீதிக்கதை.
படத்தின் முதல் பாதியில் பல அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கி வைத்து அதனை பின் விளக்குகின்றனர், கேள்விகளுக்கு த்ரில்லர் பாணியில் விடையளித்திருக்கிறது இப்படம். படத்தின் ட்ரைலர் ராட்சசன் படம் போல இருந்தது மேலும் ஒரு உதவியாக இருந்தது, படம் அதே போல் ஒரு திரில் அனுபவத்தை கொடுக்கிறது ,
இந்தப்படம் நடிகர் வைபவிற்கு 25வது படமாகும். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் வைபவ் கதையின் நாயகனாக தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இயக்குனர் கதையை முதல் பாதியில் கொண்டு சென்ற விதமும், அடுத்து என்ன என எதிர்பார்க்க வைத்த காட்சிகளும் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. ஆனால் அந்த பரபரப்பு இரண்டாம் பாதியில் தொய்வடைவது பலவீனம்.திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் போட்டிருக்கலாம் சில விஷயங்கள் நாமே கண்டு பிடிக்கும் அளவிற்கு இருந்தது.
அதேபோல் நந்திதா ஸ்வேதாவுக்கு அழுத்தமான கதாபாத்திரமாக இருந்தாலும் பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த வேளையை சரியாக செய்துள்ளனர்.
படத்தில் பின்னணி இசை, ஒளிப்பதிவு பெரிதும் பலமாக இருந்தாலும் திரைக்கதையில் சுவாரஷ்யம் இல்லாததால் இரண்டாம் பாதி சோர்வடைய வைத்திருக்கிறது. ஆனாலும் சஸ்பென்ஸ் க்ரைம் விரும்பிகளுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.
மொத்தம் அறம் ரணம் தவறேல் சில இடங்களில் தவறினாலும் ஒட்டு மொத்ததில் ஒரு முறை பார்க்கக்கூடிய த்ரில்லர் படமாக அமைந்துள்ளது.
Rating 3/5