ராயன்
இயக்குனர் – தனுஷ்
நடிகர்கள் – தனுஷ் , எஸ் ஜே சூர்யா , செல்வராகவன் , துஷாரா விஜயன்
இசை – ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்
காத்தவராயன், முத்துவேல் ராயன் மற்றும் மாணிக்கவேல் ராயன் ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா . சின்ன வயதில் தங்கள் பெற்றோர்களால் கைவிடப்படும் இவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். மூத்தவரான காத்தவராயன் தன் தம்பி தங்கச்சியின் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர். மறுபக்கம் சென்னையின் பிரபல ரவுடியின் மகன் சேது தனது தந்தையைக் கொன்ற துரையை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் எப்படியாவது மோதலை ஏற்படுத்தி அவர்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார் போலீஸ்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் கடைசி தம்பி மாணிக்கம், அடிக்கடி ஏதாவது தகராறு செய்து பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் முத்து, திருமணத்திற்காக காத்திருக்கும் தங்கை துர்கா, எப்போதும் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சைலண்டாக இருக்கும் ராயன் என முதல் பாதி செல்கிறது. எதிர்பாராமல் நடக்கும் இரு ரவுடிகளுக்கு இடையிலான மோதலில் ராயனின் தம்பி முத்து மாட்டிக்கொள்ள அவனை காப்பாற்ற அசுர அவதாரம் எடுக்கிறார் ராயன். இந்த கொலைகார கும்பலிடம் இருந்து ராயன் தனது குடும்பத்தை காப்பாறினாரா. ஒருவேளை ராயன் உயிருக்குயிராக நினைக்கும் அவன் தம்பிகள் அவனுக்கே எதிராக திரும்பினால்? ஆக்ஷன் எமோஷன் என தொடர்கிறது ராயன் படத்தின் கதை..
தனுஷின் இயக்கத்தில் உருவான இரண்டாவது படம் இது, இதில் அவரே கதானாயகனாக நடித்திருக்கிறார், மேலும் பல பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர், தனுஷின் தம்பிகளாக சந்தீப் மற்றும் காளிதாஸ் நடித்துள்ளார், மேலும் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், நடிகை துஷாரா விஜயன் கதானாயகியாக நடித்துள்ளார்,
இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார், பிண்ணனி இசை படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது, பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது, இன்னிலையில் இந்தப் படம் தியேட்டரில் பிண்ணனி இசையும் பாடலும் பிரம்மிக்க வைத்துள்ளது, இந்தப் படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் , பல காட்சிகிள் இரவு நேரத்தில் நடப்பது போல இருந்தாலும் தன் கை வண்ணத்தை அனைத்து ஃப்ரேமிலும் காட்டியுள்ளார், இந்தப் படத்தின் தரம் உயர இவர் ஒரு முக்கிய காரணம்.
எப்போழுதும் ஒரு நடிகர் இயக்கும் படங்களுக்கு தனி வரவேற்பு இருக்கும் , ஏனென்றால் பல இயக்குனர்களின் பலம் பலவீனம் அனைத்தையும் அந்த நடிகர் தெரிந்து கொள்வார், பல அனுபவங்கள் அவருக்கு கிடைத்திருக்கும், அந்த அனுபவமே ஒரு நடிகரை இயக்குனராக மாற்றும் , ரஜினிகாந்த் முதல் இன்று வந்த ப்ரதீப் வரை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம் , அதே போல தனுஷும் தனக்குள் இருந்த இயக்குனரை வெளிக்கொண்டு வந்துள்ளார், படம் டெக்னிக்கலாக ஒரு பெரிய முயர்சி , காட்சிகள் எல்லாம் அவ்வளவு நுணுக்கமாக இருந்தது தனுஷ் எழுதியதை திரைக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்று விட்டார் , திரைக்கதை மற்றும் நடிகர்கள் தேர்வு சிறப்பாக இருந்தது மேலும் ஒரு பலம்.
மொத்தத்தில் இந்த ‘ராயன்’ ஒரு தியேட்டர் திருவிழா
Rating 3/5