ரோமியோ படம் எப்படி இருக்கு?

ரோமியோ

இயக்கம் – விநாயக் வைத்தியநாதன்
நடிகர்கள் – விஜய் ஆண்டனி, மிர்நாலினி ரவி , யோகி பாபு
இசை – பரத் தனசேகர்
தயாரிப்பு – மீரா விஜய் ஆண்டனி

ஒருவன் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை செய்து வீட்டின் கடன்களை அடைத்து வருகிறான், இப்படி இருக்க அவருக்கு வயதும் 35 கடந்து விடுகிறது, சாதாரண மனிதரின் வாழ்க்கை போல தன்னால் வாழ்வை நடத்த முடியவில்லை என்று வருந்துகிறான், மற்றொரு பக்கம் பெற்றோர்களிடம் தான் ஐ டி கம்பெனியில் வேலை செய்வதாக பொய் சொல்லிவிட்டு சினிமாவில் பெரிய கதாநாயகி ஆகி விட வேண்டும் என்ற கனவோடு ஒரு பெண் தனது நண்பர்களுடன் தங்கி வருகிறாள், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்ததும் தனக்கான காதலியை தேர்ந்தெடுத்து அவளுடன் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான், இந்நிலையில் கதாநாயகியை ஒரு இடத்தில் பார்க்கிறான், இதன் பின் அவள் அவனை ஏற்றுக் கொண்டாலா இவர்கள் இருவருக்கும் இடையில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை,

விஜய் ஆண்டனியின் கதை தேர்வு எப்போதும் வித்தியாசமாக தான் இருக்கும் அதே போல இந்தப்படமும் ஒரு வித்தியாசமான கதை தான் , இந்தக் கதாபாத்திரம் அவருக்கு புதிதாக இருந்தது, அமைதியாக இருந்து பல முக பாவனை மூலம் தனது நடிப்பை காட்டியுள்ளார்,

தமிழ் சினிமாவில் மனைவியின் கனவை நிறைவேற்ற நினைக்கும் கணவன்களின் படம் நிறைய உள்ளது, அதில் இந்தப் படமும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது,

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி தனது இயல்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளர், இந்தக் கதாபாத்திரம் அவருக்கும் கச்சிதமாக பொருந்தியுள்ளது, இந்தப் படத்தில் அவர் நடிப்பது போலவே இல்லை,

கதாநாயகியாக நடித்துள்ள மிர்னாலினி தனது நடிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேரியுள்ளார் என்றுதான் கூற வேண்டும், முந்தைய படங்களை காட்டிலும் இந்தப் படத்தில் அற்புதமாக நடித்துள்ளார், ஒவ்வொரு சூழலிலும் கதைகேற்றவாரு நடித்து தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அழகாக நம்மிடம் நடத்தியுள்ளார்,

இந்தப் படத்தில் யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், ஆனால் அவர்கள் செய்யும் நகைச்சுவை பெரிதாக கை கொடுக்கவில்லை , சில இடங்களில் எரிச்சல் கொடுக்கும், ஷாரா ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அவருக்கு இது ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்.

இந்தப் படத்தில் பாடல்கள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை , ஆனால் பின்னணி இசை ஓரளவிற்கு கை கொடுத்துள்ளது, ஒளிப்பதிவும் படத்திற்கு தேவையான வற்றை கொடுத்துள்ளது,

மனைவி சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வர நினைக்கிறாள் , அவளுக்கு கணவன் எவ்வாறு உதவுகிறான், அவன் காதலை அவள் எவ்வாறு புரிந்து கொள்கிறாள், என்பதே இப்படம், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு எழுதியிருந்தால் இந்தப்படம் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

மொத்தத்தில் இந்த ரோமியோ காதலில் முடியாமல் கல்யாணத்துக்கு பிறகும் தொடரும் காதலாக இருக்கிறது,

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *