லவ்வர்
இயக்குனர்- பிரபுராம் வியாஸ்
நடிகர்கள் – மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா, கண்ணா ரவி,
இசை- ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
தயாரிப்பு – மில்லியன் டாலர் பிலிம்ஸ்
இரண்டு காதலர்களுக்கு இடையே நடக்கும் புரிதல் அற்ற சண்டைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சொந்தமாக தொழில் தொடங்கிய முயர்சியில் தோல்வியடைந்த ஒருவன் காதலினால் மேலும் பல சங்கடங்களை எதிர்கொள்கிரான் . காதலிக்கும் பெண் ஒரு நல்ல வேலையில் சேர்ந்து தனக்கென ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறால் , இந்த இருவருக்கும் இடையே பல முரண்கள் உள்ளது எனினும் இவர்கள் இந்தக் காதலில் சேர்ந்தார்களா இல்லை தங்களது ஈகோவால் பிரிந்தார்களா என்பது தான் கதை.
மணிகண்டன் ஸ்க்ரீனில் தோன்றும் காட்சியெல்லாம் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியுள்ளார். குட் நைட் படத்தில் தனக்குள் இருந்த பிரச்சனைகளை தாண்டி அன்பையும் காதலையும் அழகாகவும் ஆழமாகவும் சொல்லி ரசிக்க வைத்தார். யதார்த்தம் கலந்த காதலர்களுக்குள் பிரச்சனை எப்படி வருகிறது. அதற்கு பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை எப்படி காரணமாக அமைகிறது என்பதை ஒரு காரணமாக வைத்து இயக்குநர் . சுதந்திரம் பொதுவானது: நமக்கு ஒரு பெண் ஓகே சொல்லி விட்டாலோ கழுத்தை நீட்டி விட்டாலோ அதன் பின்னர் அவள் நமக்கு அடிமை இல்லை. அவளுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யலாம். யாருடன் பேச வேண்டுமோ பேசலாம், யாருடன் பழக வேண்டுமோ பழகலாம், யாருடன் என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம். அது அவளது தனிப்பட்ட சுதந்திரம். அதே நிலை தான் அவனுக்கும் என்கிற விஷயத்தை ஆணித்தரமாக சொல்லி காதலர்களுக்கு உண்மையிலேயே காதல்னா என்ன என்பதை புரிய வைக்க முயற்சித்து இருக்கிறார்.
இயக்குநர் பிரபுராம் வியாஸ் திரைக்கதை மற்றும் வசனத்தை சிறப்பாக எழுதி இயக்கியிருப்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். அதே போல படத்தின் இடைவேளை காட்சி மற்றும் கிளைமேக்ஸில் அவர் செய்திருக்கும் விஷயமும் படத்தை கண்டிப்பாக பார்க்க வைத்து விடுகிறது. மணிகண்டனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஸ்ரீகெளரி பிரியா ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளுகிறார். ஹீரோயின் கதாபாத்திரத்தை ஸ்ட்ராங்காக எப்படி எழுத வேண்டும் என்பதை மற்ற இயக்குநர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு தேவையான பலத்தை கொடுத்திருக்கிறது. அம்மாவாக நடித்துள்ள கீதா கைலாசம் போர்ஷனும் அருமை. ஸ்லோவாக நகரக்கூடிய காட்சிகள் மற்றும் காதலர்களுக்கு இடையே நடக்கும் டாக்ஸிக் சண்டை, பெஸ்டி, பிரேக்கப், பேட்ச் வொர்க் உள்ளிட்ட விஷயங்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.சிலருக்கு பிடிக்கலாம்.
மொத்தத்தில் காதலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்
Rating 3/5