லாந்தர் படம் எப்படி இருக்கு?

லாந்தர்

இயக்குனர் – சஜி சலீம்
நடிகர்கள் – வித்தார்த் , ஸ்வேதா டொரதி , வினின்
இசை – எம் எஸ் ப்ரவீன்
தயாரிப்பு – ஸ்ரீ விஷ்னு

படம் இரண்டு கதைகளிய மையமாகக் கொண்டுள்ளது, காவல்துறையில் நேர்மையான உயர் அதிகாரியாக வாழ்ந்து வருகிறார் ஒருவர் அவரது மனைவிக்கு இருட்டு மற்றும் அதீத சத்தம் கேட்டால் சட்டென்று பயந்து மயக்கமடையும் தன்மை கொண்டவர். மனைவியின் பயத்தை போக்க வேண்டும் என்பதற்காக நகரை விட்டு புறநகரில் உள்ள பெரிய வீடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார்.பொது மக்களை ஒருவன் கடுமையாக தாக்குவதாக புகார்கள் வருகிறது. அந்த நபரை தேடி செல்லும் காவலர்கள் சிலரும் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைகிறார்கள்.அந்த நபரை பிடிக்க தானே நேரடியாக களத்தில் இறங்குகிறார். என்பது ஒரு கதையாகவும்,
மறுபக்கம் ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தனது மனைவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, வேலைக்கு செல்கிறார். அவரது மனைவி தன் வீட்டில் இருக்கும் மருத்துவ அறிக்கை ஒன்றை பார்த்துவிட்டு, அது குறித்து மருத்துவர் ஒருவரிடம் விசாரிக்கிறார். அவர் சொல்லும் தகவல்களை கேட்டு அதிர்ச்சியடைந்து அவசர அவசரமாக வீட்டுக்கு வருகிறார், மருத்துவர் என்ன சொன்னார்? என்பது ஒரு கதையாகவும் நடக்கிறது, ஒரு இரவில் நடக்கும் இந்த இரண்டு கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதே மீதிக்கதை.

இந்தப் படத்தில் நடிகர் விதார்த் முதல் முறையாக ஐ.பி.எஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் , போலிஸ் என்று கம்பீரத்தை காட்டாமல், மனிதத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது வீட்டு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலரிடம் உடல் நலம் விசாரிப்பது, தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு உத்தரவு போடாமல், தானே களத்தில் இறங்கி பணியாற்றுவது, என்று அவரது ஒவ்வொரு நடவடிக்கையும், ”இப்படியும் ஒரு உயர் அதிகாரியா..!” என்று ஆச்சரியப்பட வைக்கிறது.அவருக்கு நாயகியாக ஸ்வேதா டோரத்தி நடித்துள்ளார் ஒரு புதுத்தம்பதி போல இவர்கள் இருவருக்கும் இடையேயான காட்சிகள் அழகாக இருந்தது

படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளனர், குறிப்பாக இளம் தம்பதியாக நடித்திருக்கும் விபின் மற்றும் சஹானா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர், மேலும் பசுபதிராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் என படத்தில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். நடிகர்கள் தேர்வு சரியாக இருந்தது,

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.பிரவீன் இசையமைத்துள்ளார் அவரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு ஓரளவு மட்டுமே கைகொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஞான சவும்தார் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம் நம்மை படத்தோட கட்டிப்போடுகிறது. கதை முழுவதும் இரவு நேரத்தில் நடந்தாலும் எந்த ஒரு இடத்திலும் உறுத்தல் இல்லாத ஒளிப்பதிவின் மூலம் படத்தின் தரத்தை உயரத்தியிருக்கிறார். காட்சிகளில் தெளிவு இருந்தது,

இரண்டு கதைகளை நான் லீனியர் பாணீயில் சொல்லி சஸ்பென்ஸ் செய்யும் யுக்தியை தான் இயக்குனரும் கையாண்டுள்ளார்,படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் சுவாரஸ்யம் மற்றும் சஸ்பென்ஸ் அடுத்தடுத்த காட்சிகளின் போது குறைந்தாலும் இறுதியில் சிறப்பாக அதை கடத்தி விட்டார்,

ஒரு சாதாரண மனிதன் திடிரென சமூகத்தின் மீதும் மக்களின் மீதும் கோவம் கொள்ள என்ன காரனம் என்பதே இப்படத்தின் முக்கிய கதை அதனை இரண்டு கதைகளை வைத்து சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர், முதல் பாதியில் இருந்த திரைக்கதை இரண்டாம் பாதியில் இருந்தால் படம் இன்னும் நிறைய வரவேற்பை பெற்றிருக்கும்,

மொத்தத்தில் இந்த லாந்தர் சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கான படம்.

இரண்டாம் பாதியில் சில குறைபாடுகள் இருந்தாலும், முதல் பாதி படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொன்னதற்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

மொத்தத்தில், ‘லாந்தர்’ வெளிச்சம் இல்லை.

Rating 2.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *