லால் சலாம்
இயக்குனர்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர்கள் – ரஜினிகாந்த் , விஷ்ணு விஷால், விக்ராந்த்
இசை – ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவிஸ்
ஒரு கிராமத்தில் இரண்டு வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் கிரிக்கெட் போட்டியில் அடிக்கடி நேருக்கு நேராக மோதிக் கொள்கின்றனர். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த சண்டையை வைத்து அங்கே சிலர் மத அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர். இவர்கள் பிரச்சினையை வைத்து அந்த ஊரில் நடக்கும் தேர்த் திருவிழாவில் கலவரத்தை நடத்தவும் சதித் திட்டம் தீட்டப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த கிராமம் முழுவதும் மத ரீதியாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்கிறது. இதனையறிந்து மும்பையில் டானாக இருக்கும் மொய்தீன் பாய், தனது சொந்த ஊரான அந்த கிராமத்துக்கு வந்து அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்கிறார். ஆரம்பத்தில் சமாதானமாக பேசிப் பார்க்கும் மொய்தீன் பாய் பின்னர் பாட்ஷா ஸ்டைலில் ஆக்ஷனில் வில்லன்களை மிரட்டுகிறார் . அதன் பின்னர் அந்த கிராம மக்கள் எப்படி அந்த பிரச்சனையை சரி செய்தனர் என்பதே இப்படத்தின் கதை.
ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் . படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ளது படத்திற்கு பெரும் வரவேற்பை கொடுத்தது, லால் சலாம் படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படம் முதல் பாதியில் பெரிதாக கவனம் ஈர்க்காமல் இருந்தாலும் , இரண்டாம் பாதியில் ரஜினியின் வருகைக்குப் பின்னர் படம் சூடு பிடித்து விட்டது. இரண்டாம் பாதி முழுக்க ரஜினியே தன் கையில் படத்தை தாங்கியுள்ளார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கிரிக்கெட் வீரர்கள் என்பதால், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபமாக வந்துள்ளது. சில காட்சிகளில் கிரிக்கெட் போட்டியை லைவாக பார்த்த அனுபவம் கிடைக்கும் . ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மேக்கிங், வசனங்கள் லால் சலாம் படத்துக்கு ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது அதேபோல் பாடல்களில் சொதப்பிவிட்ட ஏஆர் ரஹ்மான், பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் . முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏஆர் ரஹ்மான் போட்டுள்ள பிஜிஎம் ஒவ்வொன்றும் தியேட்டரில் விசில் பறக்கும். ஒட்டுமொத்தமாக லால் சலாம் பக்கா கமர்சியல் ஜானரில் ரஜினி ரசிகர்களுக்கான படமாக இருக்கும்
மொத்தத்தில் மத அரசியலை கிரிக்கெட் கலந்து ஒரு கமர்ஷியலாக சொல்லியுள்ளனர் லால் சலாம் படக்குழுவினர். அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்
Rating 3/5