வாஸ்கோடகாமா
இயக்கம்: ஆர் ஜே கே
நடிகர்கள்: நகுல் , அர்தனா பினு, கிங்ஸ்லி, கே எஸ் ரவிக்குமார்
இசை: என் வி அருண்
தயாரிப்பு – தத்தோ பி சுபாஸ்கரன்
படம் எதிர் காலத்தில் நடக்கும் ஒரு கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளது , அதில் நல்ல செயல்களை செய்பவர்களை குற்றாவாலியாகவும் தீய செயல்களை செய்பவர்களை மேன்மையானவர்கள் எனவும் சொல்கின்றனர், இப்படியான ஒரு கற்பனை கதைதான் இந்தப்படம், ஒருவன் மிகவும் நல்லவனாக இருக்கிறான் அதற்காக ஜெயிலுக்கு செல்கிறான் ,ஒருவன் ஜெயிலுக்கு செல்வதற்காக நல்லவன் போல நடிக்கிறான், இந்த இருவரும் எதற்காக ஜெயிலுக்கு வந்தனர் என்பதை விரிவாக விபரிப்பதே இப்படத்தின் மீதிக்கதை,
நகுல் நீண்ட நாட்களாக பெரிய வெற்றியை பார்க்கவில்லை கடைசியாக அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது ” தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” அந்தப் படத்திற்கு பிறகு பெரிதாக எந்த படமும் மக்களிடம் கொண்டு சேரவில்லை அதனால் இம்முறை நகைச்சுவையை கையில் எடுத்துள்ளார், படத்தில் கிங்ஸ்லி மற்றும் சக நடிகர்களுடன் இணைந்து காமெடி செய்துள்ளார்,
கதை ஒரு நல்ல காமெடி படத்திற்கு பொருத்தமான கதை அதில் பல அடுக்குகளை வைத்துள்ளார் இயக்குனர் , படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் நடக்கும் இடம் அனைத்துமே கற்பனை என்பதால் இயக்குனர் பல வித்தியாசமான காட்சிகளை படத்தில் வைத்துள்ளார்,
இந்தப் படத்தில் நகுலுக்கு நாயகியாக அர்த்தன பிணு நடித்துள்ளார், கதாநாயகி கதாபாத்திரம் அவருக்கு நன்றாக பொருந்தியுள்ளது, அவரது அழகான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார், கிங்ஸ்லி மற்றும் மன்சூர் அலிகான் இணைந்து நகைச்சுவையில் கலக்கியுள்ளனர் , அவர்களுடன் கே எஸ் ரவிக்குமார் இணைந்தது மேலும் ஒரு பிளஸ்,
இந்தப் படத்திற்கு என் வி அருண் இசையமைத்துள்ளார், இரண்டு பாடல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, பின்னணி இசை நகைச்சுவை காட்சிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது, அதே போல் ஒளிப்பதிவாளர் ஒரு எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுக்கு எப்படி காட்சிகள் அமைக்க வேண்டுமோ அப்படி அமைத்துள்ளார் , அவரின் பங்கீடு இந்தப் படத்தில் அதிகம் தெரிந்தது, இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவை என் எஸ் சதிஸ் குமார் கையாண்டுள்ளார்,
பின் வரும் காலத்தில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற வாய்ப்புள்ளது , என்பதை இயக்குனர் சிரிக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் நம்மை சிந்திக்கவும் வைத்துள்ளார், இயக்குனரின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு நகுலும் பெரிய உந்துதலாக இருக்கிறார் , நீண்ட நாள் வெற்றிக்காக காத்திருக்கும் நகுலுக்கு இந்தப் படம் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படமாக அமையும் ,
மொத்தத்தில் இந்த “வாஸ்கோடகாமா” ஒரு ஆச்சரியம்.
Rating 2.5/5