வித்தைக்காரன் படம் எப்படி இருக்கு

வித்தைக்காரன்

இயக்குனர்- வெங்கி
நடிகர்கள் – சதீஷ் , சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ்
இசை – வி பி ஆர்
தயாரிப்பு – K விஜய் பாண்டி

சென்னையில் ஒரு மூன்று குழு கள்ளக்கடத்தல் செய்கின்றது, இந்த சமயத்தில் கதானாயகனான மேஜிஸியன் அந்த மூன்று குழுவையும் குழப்பி அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்க முயல்கிறான். அவன் எதற்காக இப்படி செய்கிறான் இதன் பின் நடந்தது என்ன என்பதே இப்படத்தின் கதை?

நகைச்சுவையில் இருந்து மாறிய சதீஷ் கதை நாயகனாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். காமெடி கலந்த வித்தியாசமான திரைப்படமாக வந்திருக்கிறது “வித்தைக்காரன்”. இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரம்தான் இந்தப் படத்திற்கு பலம் மற்றும் பலவீனம் . முக்கியமான சீரியஸ் காட்சிகளில் நகைசுவை செய்தும் நகைசுவை காட்சிகளில் சீரியஸாக நடித்திருக்கின்றனர்.

சதீஷுக்கு இந்தப்படம் நல்ல வாய்ப்பு ஆனால் தவறவிட்டிருக்கிறார். ஒரு மேஜிக்மேன் கதாபாத்திரத்துக்கு தேவையான எந்த ஒரு உழைப்பும் போடவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு ஒரு புத்திசாலி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது ஆனால் அந்த கேங்கை ஏமாற்றும் காட்சிகளில் வெறும் காமெடியனாகவே தெரிகிறார். படத்தில் ப்ளாக் காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. படத்தைக் காப்பாற்றுவது ஆனந்த்ராஜும் அவரது கேங்கும் தான். ஆனந்த்ராஜ் அடிக்கும் ஒன்லைனர் வெடித்து சிரிக்க வைக்கிறது.

ஏர்ஃபோர்ட் காட்சி முதல் பல இடங்களில் படத்திற்கு நிறைய செலவு செய்திருப்பது தெரிகிறது. ஆனாலும் ஏதோ குறை.. நாயகியாக சிம்ரன் குப்தா பெரிய வேலை இல்லை. மதுசூதனன் ராவ், சுப்பிரமண்ய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து என ஒரு பெரிய கூட்டம் படத்தில் வருகிறது. எல்லோரும் அவர்களுக்கு தந்ததை செய்துள்ளார்கள். சாம்ஸ் ஜப்பான் குமார் இருவரும் தனித்து தெரிகிறார்கள்.

எடிட்டிங் படத்தின் மிகப்பெரிய மைனஸ், முதல் பாதியெல்லாம் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. படத்திற்கு இசையும் பெரிதாக உதவவில்லை, ஒளிப்பதிவு சுமாராக இருக்கிறது. நடிகர் சதீஷ் தன் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு அதிக மெனல்கெடல் போடாவிட்டாலும் , தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான அடிப்படையாவது தெரிந்திரிக்க வேண்டும். புத்திசாலித்தனமான கதையை தன்னுடைய சுமார் நடிப்பால் தொம்சம் செய்து விட்டார்,

மொத்தத்தில் வித்தைக்காரன் படத்தின் வித்தை எடுபடவில்லை,

Rating 2..5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *