விருது வாங்குவதே
தந்தைக்கு ஆற்றும் பணி!
இசையமைப்பாளர் தஷியின் மகன் தஷி ரெங்கராஜ் “பேப்பட்டி” என்ற மலையாளப் படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்!
இந்தவாரம் கேரளாவில் 120 திரையரங்குகளில் படம் வெளியாகி, வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘சேஸிங்’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்த, தஷி மறைவுக்கு பின், அவரது மகன் தஷி ரெங்கராஜ் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்’ ‘பித்தள மாத்தி’ ஆகிய தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ‘அஞ்சன சுத்தா’ என்ற கன்னட படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
மலையாளத்தில் ‘தந்ரா’ என்ற படத்திற்கு இசையமைத்து, 2007-ம் ஆண்டு கேரளாவில் மாநில விருது பெற்றார் இசையமைப்பாளர் தஷி. தனது தந்தை போலவே தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் பணியாற்றி, விருதுகள் பெறுவதே, தந்தைக்கு ஆற்றும் பணியா கருதி, பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் தஷி ரெங்கராஜ்.
twitter – @Rengaraj_Guhan
instagram – Thashi Rengaraj
facebook. – Thashi rengaraj
@GovindarajPro