வீராயி மக்கள்
இயக்கம் – நாகராஜ் கருப்பையா
நடிகர்கல் – வேல ராமமூர்த்தி , மாரிமுத்து , சுரேஷ் நந்தா, தீபா , நந்தனா
இசை – தீபன் சக்கரவர்த்தி
தயாரிப்பு – சுரேஷ் நந்தா
ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் ஒரே தெருவில் இருந்து கொண்டு விரோதம் காரணமாக பேசாமல் சண்டை போட்டுக் கொள்கின்றனர், அவர்களை போல அவர்களின் மகன்களும் மகள்கலும் ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டு பகையுடன் இருக்கின்றனர், ஆனால் அதில் ஒரு மகன் மட்டும் இரண்டு குடும்பமும் ஒன்றாக இணைய வேண்டும் என ஆசைப்படுகிறான், அதற்காக பல முயற்சிகள் எடுக்கிறான் , இறுதியில் அந்த குடும்பம் இணைந்ததா இல்லை அதனால் வேரு சில பிரச்சனை உருவானதா என்பதே இப்படத்தின் மீதிக் கதை ,
இந்தக்கதை கிராமங்களில் அன்றாடம் நாம் நேரில் பார்க்கும் ஒரு சம்பவம் தான் , அதனை மையமாகக்கொண்டு மாயாண்டி குடும்பத்தார் பட பாணியில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா.
இந்தப் படத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அவர் இறந்த பின் வெளியாகும் ஒரு முக்கிய படம் இது, மேலும் வேல ராமமூர்த்தி வழக்கம் போல் மிடுக்கான தோற்றத்தில் கோபமான பார்வையோடும் நடித்திருக்கிறார், அவரது கதாபாத்திரம் நம் மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம் மேலும் நடிகர் மாரிமுத்து தனது இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். .
இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் சுரேஷ் நந்தா சிறப்பாக நடித்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார், தயாரிப்பாளராக இருந்தும் தனக்கென காட்சிகள் ஏதும் வைக்காமல் படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார், காதல் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளில் ஒரு எதார்த்த நாயகனை போல நடித்துள்ளார். நாயகியாக நடித்திருக்கும் நந்தனா ஒரு அழகான கிராமத்து பெண்ணாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் , அந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது
மற்ற கதாப்பாத்திரங்கள் தங்களின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர், அண்ணன்களின் பாசத்திற்காக ஏங்கும் தங்கையாக நடித்திருக்கும் தீபா சங்கர் வழக்கம் போல் தனது நடிப்பை காட்ட்டியுள்ளார், மாரிமுத்துவின் மனைவியாக நடித்திருக்கும் செந்தி குமாரி, கணவரின் உடன்பிறப்புகள் ஒற்றுமையாக இருக்கவே கூடாது, என்று சபதம் ஏற்ற பெண்களின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாக நடித்திருக்கிறார். வேல ராமமூர்த்தியின் மனைவியாக நடித்திருக்கும் ரமாவின் நடிப்பு அளவாக இருந்த்து, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள், ஊர் மக்களாக வருபவர்களும் மண்ணின் மனிதர்களாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவை ஒளிப்பதிவாளர் எம்.சீனிவாசன் மேற்கொண்டுள்ளார், நாம் கிராமத்து வீதிகளில் நடந்து செல்லும்போது எதையெல்லாம் கவனிப்போமோ அப்படி உள்ளது அவரது கேமரா, கிராமத்து அழகியலை அற்புதமாக காட்டியுள்ளார். இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தியின் இசை கேட்பதற்கு மென்மையாக இருந்தது , அதிக இரைச்சல் சத்தம் போல் இல்லாமல் அளவான இசையில் பாடல்கள் கேட்பதற்கு சிறப்பாக இருந்தது,
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் மனக்கசப்பு என இருந்தாலும் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை மனதில் வைக்க வேண்டும் என்ற மையக்கருத்தாக எடுத்துக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா, படம் பார்க்கும்போது நம் குடும்பத்தில் இருக்கும் நிஜ கதாபாத்திரம்கள் நம் மனதில் நிச்சயம் தோன்றும், அண்ணன் தம்பி பாசம் , பங்காளிகள் பகை என அனைத்து விதமான உணர்வுகளையும் இந்தப் படத்தில் கையாண்டுள்ளார் இயக்குனர்
மொத்தத்தில், இந்த ‘வீராயி மக்கள்’ மக்கள் பாசக் கூட்டம்,
ரேட்டிங் 3.5/5