வெப்பன்
இயக்கம் -சென்னியப்பன்
நடிகர்கள் – சத்யராஜ், வசந்த் ரவி , தான்யா ஹோப்,
இசை – ஜிப்ரான்
தயாரிப்பு – எம் எஸ் மன்சூர்
இந்த உலகில் சாதாரண மனிதனுக்கு உள்ள சக்திகளைத் தாண்டி, சூப்பர் ஹியூமன்கள் எனப்படும் மனிதர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என அழுத்தமாக ஒருவன் நம்புகிறான், தமிழ்நாட்டின் பிரபல யூடியூபராகவும், அதே நேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் வலம் வருகிறார். இன்னொரு புறம் ரகசியக் குழு ஒன்றையும், பயோடெக் நிறுவனத்தின் மூலம் மனிதர்களை கொல்லும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வரும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஒருவர், தேனியில் நிகழும் அதிசய நிகழ்வு ஒன்றைத் தொடர்ந்து, தன் சேனலுக்காக கண்டெண்ட் தேடி அங்கு வரும் கதாநாயகன், மற்றொரு புறம் அடுத்தடுத்து உயிரிழக்கும் தங்கள் ப்ளாக் சொசைட்டி நபர்களுக்கு ஆபத்தாக ஒரு சூப்பர் ஹியூமன் தான் இருக்கிறார் என்பதைக் கண்டறிந்து வில்லன் ஆட்களும் பயணிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க, இருவரும் தேடிச் சென்ற சூப்பர் ஹியூமன் நபரைக் கண்டறிந்தார்களா? அவர் யார் என்பதே இப்படத்தின் மீதிக்கதை,
சூப்பர் ஹியூமன் என விளம்பரப்படுத்தப்பட்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தோன்றும் சத்யராஜ் கதாபாத்திரம். இடைவேளையின்போது மாஸாக அறிமுகமாகிறார். எதிர்பார்த்ததை குறைவான ஸ்க்ரீன் டைம் என்றாலும் யானையுடன் கட்டிப்பிடித்து விளையாடுவது, மறுபக்கம் வில்லன்களை தயவு தாட்சண்யமின்றி புரட்டிப்போட்டு அடிப்பது, குடும்பத்தை எண்ணி கலங்குவது என கதாபாத்திரத்துக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறார்.
இந்த படத்தின் மற்றொறு முக்கிய நாயகன் வசந்த் ரவி. சாதாரண யூடியூபராக, சூழலியல் பற்றி வகுப்பெடுக்கும் நாயகனாக அறிமுகமாகி முதல் பாதியில் “இவர் என்ன துணைக் கதாபாத்திரம் போல் வலம் வருகிறார்!” என யோசிக்க வைக்கும் வசந்த் ரவி, இரண்டாம் பாதியில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடல்வாகுடன் வசந்த் ரவி கச்சிதமாகப் பொருந்தியுள்ளார், இந்தப் படத்தில் நடிகை தான்யா ஹோப்பிற்கு பெரிதாக முக்கிய கதாபாத்திரம் இல்லை எனினும் தனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் ஸ்கோர் செய்துள்ளார், . ஸ்டைலிஷ் ஹை சொசைட்டி வில்லனாக வரும் ராஜீவ் மேனன், என நடிப்பில் பஞ்சமில்லாமல் இதில் நடிகர்கள் உள்ளனர்,
இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார், படத்தில் முக்கியமாக தேவைப்படுவது பின்னணி இசை அதை பிரம்மாண்டமாக கொடுத்துள்ளார், பிரபு ராகவ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், படத்தில் சிலக்காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தது தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார், படத்தில் கிராபிக் காட்சிகள் தத்ரூபமாக அமைந்துள்ளது,
மேட் மேக்ஸ் போன்ற ஆங்கில படங்களின் பாணியில் தமிழில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளது பெரிய சாதனை தான் அதற்கே படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் ,
இயக்குனர் மிகப்பெரிய கதையை இந்தப் படத்தில் சொல்ல நினைத்துள்ளார், பல பல அடுக்குகளாக கதை பயணிக்கிறது, எளிய மக்கள் இந்தப் படத்தை புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம் தான் , ஆனால் சினிமா ரசிகர்களுக்கு இந்தப்படம் விருந்து,
மொத்தத்தில் இந்த ‘ வெப்பன்’ சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்து.
Rating 3/5