வெப்பம் குளிர் மழை
இயக்குனர் : பாஸ்கல் வெடிமுத்து
நடிகர்கள் – எம் எஸ் பாஸ்கர் , திரவ், இஸ்மத் பானு , விஜயலட்சுமி
இசை : ஷங்கர்
தயாரிப்பாளர்கள் : திரவ்+ ஹாஷ்டாக் புரொடக்ஷன்
கல்யாணமான தம்பதிகளுக்கு திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் அவர்களின் வாழ்க்கை பாதிப்படைகிறது, மாடுகளுக்கு சினை ஊசி போடும் வேலை பார்க்கும் ஒருவருக்கும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது, அந்த திருமணம் நடந்து குழந்தை இல்லாததால் அவர்களது தின வாழ்வில் பல சங்கடங்களை சந்திக்க நேர்கிறது , இப்படி இருக்கும் சூழ்நிலையில் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்கின்றனர் அதில் சில சோகமான உண்மை வருகிறது, ஆனால் இதனை கணவரிடம் சொல்ல மறுத்துவிட்டு ஒரு புதிய முயற்சியை மனைவி மேற்கொள்கிறார் அதனால் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது, நாளடைவில் ஒரு பிரச்சனை வருகிறது, அது என்ன அதற்கான காரணம் என்ன என்பதே இப்படத்தின் மீதிக்கதை,
இந்தப் படம் மருத்துவத்தில் ஏற்பட்ட அதிக வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளாமலும் அதனை புரிந்து கொள்ளாமல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனிதர்களை பற்றிய ஒரு அறிவுரை படமாக இருக்கிறது,
இந்தப் படத்தில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஊர் மந்தையில் படுத்துக் கொண்டு பொது மக்களுக்கு அறிவுரை கூறும் கதாபாத்திரமாக அவரது தோற்றம் இருந்தது, அதனை அவரது பாணியில் அற்புதமாக செய்துள்ளார்,
முதல் படத்திலேயே ஓர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நாயகன் திரவ் நடித்துள்ளார் , ஒரு சராசரி மனிதன் குழந்தை இல்லாமல் என்னென்ன சங்கடத்திற்கு ஆளாகிறான் என்பதே நம்மிடம் அழகாக கடத்தியுள்ளார் , தன்னை சுற்றியுள்ள மனிதர்களின் பேச்சு மற்றும் தன் குறைபாடு என அனைத்து விதமான உணர்வுகளையும் நம்மிடம் கடத்தியுள்ளார், இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதாக பேசப்படும்,
அதே போல மனைவியாக நடித்துள்ள கதாநாயகி இஸ்மத் பானு தன்னுடைய இயல்பான நடிப்பால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார், சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு இதுவே முதல் படமாகும் ஆனால் அது தெரியாதது போல அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார், ஒரு பெண் குழந்தை இல்லாமல் படும் அவமானங்களை இயல்பாக நடித்து நம்மை குற்ற உணர்விற்கு கொண்டு வந்துள்ளார், இருவருக்கும் பெரிய எதிர்காலம் உண்டு ,
மற்ற கதாபாத்திரங்களாக நடித்துள்ள ரமா , விஜயலட்சுமி மற்றும் கார்த்திகேயன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு ஈடு செய்துள்ளனர்,
படத்தில் பாடல்கள் அனைத்தும் கிராமப்புற இசையால் நிறைந்துள்ளது , இந்த படத்திற்கு சங்கர் இசையமைத்துள்ளார், பின்னணி இசை இந்தப் படத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது, ஒரு கிராமத்தை மிக அழகாக ஒளிப்பதிவாளர் பிரித்வி காட்டியுள்ளார், படம் நம்மோடு ஒன்ற விட்டது அது போல ஒரு சிறப்பான ஒளிப்பதிவை செய்துள்ளார்,
குழந்தையின்மை பற்றி பல படங்கள் வந்துள்ளது அதில் விக்ரம் நடிப்பில் ஒரு படம் வந்து மிகப்பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியது, அது போல இந்த படமும் மக்களிடம் அறிவியல் வாயிலாகவும் அவர்களின் பகுத்தறிவையும் உயர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது, இயக்குனருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள் , இப்படி ஒரு சமூக கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு பெரிய முயற்சி செய்துள்ளார்,
மொத்தத்தில் இந்த “வெப்பம் குளிர் மழை” அனைத்து சூழ்நிலைக்கும் பொருத்தும் ஒரு படமாக வந்துள்ளது ,
Rating 3.5/5