ஹிட்லிஸ்ட் படம் எப்படி இருக்கு?

ஹிட்லிஸ்ட்

இயக்குனர் – சூர்யகதிர் கக்கள்ளர்- கார்திகேயன்
நடிகர்கள் – சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்
இசை – சத்யா
தயாரிப்பு – ஆர் கே செல்லுலாய்டு – கே எஸ் ரவிகுமார்.

ஒருவன் மிகவும் மனிதாபிமான உணர்வோடு சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற கொள்கையில் வாழ்ந்து வருகிறான், தந்தை இல்லாத அவனுக்கு தாயும் தங்கையும் தான் உலகமாக நினைத்து வாழ்கிறான். இந்த நிலையில் அவனது வாழ்க்கையில் திடீரென்று நுழையும் முகமூடி அணிந்த நபர், அவரது அம்மா மற்றும் தங்கையை கடத்தி வைத்துக்கொண்டு, அவரை மிரட்டி இரண்டு கொலைகளை செய்யச் சொல்கிறார். எதற்காக அவர் கொலை செய்யச் சொல்கிறார்?, முகமூடி மனிதரிடம் சிக்கிக்கொண்ட அம்மா, தங்கையை விஜய் கனிஷ்கா எப்படி மீட்கிறார்?, அந்த முகமூடி மனிதர் யார்? என்பதை காவல்துறை அதிகாரி சரத்குமார் கண்டுபிடித்தாரா? என்பதே இந்தப்படத்தின் மீதிக்கதை.

இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இந்தப் படத்ஹ்டின் மூலம் அறிமுக நாயகனாக கால் பதிக்கிறார். முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரம் மட்டும் இன்றி நடிப்பில் வேறுபாட்டை காண்பிக்கும் வேடத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். அப்பாவியான அவர் தனது அம்மா, தங்கையை காப்பாற்றுவதற்காக வில்லன்களிடம் மோதும் காட்சிகளிலும் சரி, காவல்துறை மற்றும் முகமூடி மனிதர் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சிகளிலும் சரி, நேர்த்தியான நடிப்பு மூலம் முழு படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறார். ஒரு கை தேர்ந்த நடிப்பின் சாயல் அவரிடம் தெரிகிறது.

இந்தப் படத்தில் சரத்குமார் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார், படம் முழுவதும் அவரின் பங்கு உள்ளது முதல்பாதியில் பெரிய வேலை ஏதும் இன்றி பயணிக்கிறார் ஆனால் அதே சமயம் இரண்டாம் பாதியில் தனக்கான ஆக்‌ஷன் காட்சிகளோடு, முகமூடி மனிதர் யார்? என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார். விஜய் கனிஷ்காவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு சிறிய வேடம் என்றாலும், வழக்கம் போல் நல்ல விசயங்களை பேசும், நல்ல மனம் கொண்ட வேடத்தில் நடித்திருக்கிறார். மருத்துவமனை டீனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், வழக்கம் போல் தனது ஸ்டைலிஷான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ஸ்மிருதி வெங்கட் சம்மந்தப்பட்டிருக்கும் பிரச்சனை மக்கள் எதிர்கொண்டவை என்பதால், அவரது காட்சிகள் மனதுக்கு நெருக்கமாக அமைந்திருப்பதோடு, அவரது நடிப்பு கண்கலங்க வைக்கிறது. நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சித்தாரா, தங்கையாக நடித்திருக்கும் அபி நக்‌ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, அனுபமா குமார், ராமச்சந்திரன் ஆகியோர் அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். பாலசரவணன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி குறைவான காட்சிகள் வந்தாலும், அதில் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுகிறார்கள்.

இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா இசையமைத்துள்ளார். அவரது இசையில் பக்கபலம் பிண்ணனி இசை தான் . ஒரு பாடல் சிறப்பாக இருந்தது,மற்ற பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஒளிப்பதிவினை கே.ராம்சரண் கையாண்டுள்ளார் ஒரு சஸ்பென்ஸ் படத்திற்கு தேவையானதை பூர்த்தி செய்திருக்கிறார்.

மொத்த படமும் ஓரே கேள்வியுடன் தான் நகர்கிறது முகமூடி மனிதர் யார்?, அவர் எதற்காக கொலை செய்யச் சொல்கிறார்? இந்த கேள்விகளுக்கான சஸ்பென்ஸை இறுதி வரை ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி இயக்குநர்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் வில்லன் ராமச்சந்திரன் உடனான விஜய் கனிஷ்காவின் மோதல், கெளதம் வாசுதேவ் மேனன் கதாபாத்திரத்தின் எண்ட்ரி ஆகியவை படத்தை ரசிக்க வைப்பதோடு, நடப்பவை குறித்து முகமூடி மனிதர் கொடுக்கும் விளக்கம் சமூகத்திற்கும், மக்களுக்கும் நெருக்கமாக இருப்பதால் ரசிகர்களால் கதையுடன் ஒன்றி பயணிக்க முடிகிறது. மேலும் சிறந்த கருத்துகளை மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில், இந்த ‘ஹிட் லிஸ்ட்’ ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகும்

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *