உயிர்பெறும் புதுமைபித்தன் எழுத்துக்கள்:

உயிர்பெறும் புதுமைபித்தன் எழுத்துக்கள்:

கலை இலக்கிய உலகின் முக்கிய எழுத்தாளரான புதுமைப்பித்தனின் சிறுகதை தொகுப்பிலிருந்து “ஆற்றங்கரை பிள்ளையார்”, “குப்பனின் கனவு”, “ஒப்பந்தம்”, “கட்டில் பேசுகிறது”, விபரீத ஆசை”, “ தனி ஒருவனுக்கு “ என்னும் ஆறு சிறுகதைகள் தேர்வு செய்யப்பட்டு “நம் அருமை புதுமைப்பித்தன்” என்னும் தலைப்பில் நாடகமாக்கப்பட்டுள்ளது

இந்நாடகத்தினை தியேட்டர் “கோ” தயாரித்து வழங்குகிறது.

ஒத்திகை இட உதவி: ஷ்ரவன் ராமகிருஷ்ணன், அமெரிக்கன் வேர்ல்ட் ஸ்கூல் தரமணி, வாயுஷாஷ்த்ரா (நாடக கலை மூலம் அறிவியல் கற்பிக்கும் நிறுவனம்)

இயக்கம்: பிரசன்னா ராம்குமார்
நடிகர்கள் : ஷ்ரவன் ராமகிருஷ்ணன், பாகிரதி, சுகுமார், பிரேம்குமார், நந்தகுமார், மகேந்ரா, மகேந்திரவர்மா, முருகானந்தம், சுந்தர், பௌஜிஜுவல், கௌதமி.
இசை : ஆனந்த குமார்.
ஒளி அமைப்பு : பேபி சார்லஸ்
கலை : சுகுமார், விவேக், பிரேம்குமார், மகேந்திர வர்மா
போஸ்டர் வடிவம் : குங்குமராஜ்
பாடல்கள் : வெரோனிகா

நம் அருமை புதுமைப்பித்தன் நாடகமானது பிப்ரவரி 3 ஆம் தேதியன்று மாலை 4.30 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை என்னும் அரங்கத்தில் முதன்முறையாக மேடையேற உள்ளது.
நாடகத்தை காண்பதற்க்கான நுழைவுச்சீட்டை “புக் மை ஷோ” வில் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *