ஒருவர் கொலை செய்யப்பட்டால்
ஏன் கொலை செய்யப்பட்டார் எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலையின் பின்னணி என்ன என்பதை ஆராய்வதை விட,
அதை அரசியல் கொலையாகவும், ஜாதி கொலையாகவும் மாற்றிவிடவே பலர் துடிக்கின்றனர்.
அனுதாபம் காட்டுவதை விட
சுயலாபம் காணவே பலர் துடிக்கின்றனர்.
ஒரு கட்சி இன்னொரு கட்சிமீது பழி சுமத்துவது,
இறந்தவர் மீது ஜாதி வளையம் வைத்து ஜாதி கொலையாக மாற்ற துடிப்பது இதெல்லாம் சமூக ஆரோக்கியம் இல்லை.
சட்ட ஒழுங்கு பின்னடைவு என்பது வேறு,
கொலைக்கு ஆளும் கட்சியை காரணம் என்பது வேறு.
கொலைக்கு நியாயம் கேட்பது வேறு!
கொலையில் சுயலாபம் பார்ப்பது வேறு!
கொலை செய்யப்பட்டவர் யார்?
கொலை செய்தவர்கள் யார்?
கொலைக்கான உண்மையான காரணம் என்ன?
இந்த விடையை நோக்கித்தான் அனைவரும் நகர வேண்டும்.
சிலரின் யூகங்கள் சமூகத்தில் தேவையில்லாத சலசலப்பை உருவாக்கும்.
எல்லாவற்றிக்கும் ஜாதியை முன்னிறுத்துவது
நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து விடும்!
—இயக்குனர் பேரரசு