சபரி
இயக்குனர் – அணில் கட்ஸ்
நடிகர்கள் – வரலட்சுமி சரத்குமார், கோபி , ஷஷாங்க்
இசை – கோபி சுந்தர்
தயாரிப்பு – மகேந்திரநாத்
ஒரு பெண் தன் கனவணை விவாகரத்து செய்து விட்டு தன் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார், இன்னிலையில் அவரிடம் இருந்து குழந்தையை பிரிக்க அவரது முன்னாள் கணவர் முயற்சிக்கிறார். இதற்கிடையே, கொலை குற்றவாளியான ஒருவர் அந்தக் குழந்தை தன்னுடைய குழந்தை என்று சொந்தம் கொண்டாடுவதோடு, சிறுமியை கடத்தி வைத்துக்கொண்டு அந்தப்பெண்ணிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்கிறார். இதன் பின் என்ன ஆனது அந்தக் குழந்தை யாருக்கு சொந்தம் என்பதே படத்தின் மீதிக்கதை,
கணவன் துணை இல்லாமல் வாழும் பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்கும் என்பதை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் விதத்தில் நடித்திருக்கிறார். தன் குழந்தையை பின் தொடரும் ஆபத்தில் இருந்து அவரை காப்பாற்ற போராடும் வரலட்சுமி, நடிப்பு மற்றும் ஆக்ஷன் இரண்டையும் அளவாக கையாண்டு கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
இந்தப் படத்தில் மைக் கோபி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஆரம்பத்திலேயே கவனம் ஈர்க்கும் வகையில் அறிமுகமாகும் மைக் கோபியின் கதாபாத்திரம் எதிர்பார்ப்பு மிக்கதாக பயணிக்கிறது. மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வந்த அவரது நடவடிக்கைகள் மிரட்டலாக இருந்தாலும், படம் முடியும் போது அவரது வேடம் செல்லா காசகிவிடுகிறது.வரலட்சுமியின் கணவராக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன், வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் ஷசாங் இருவரும் கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். வரலட்சுமியின் மகளாக நடித்திருக்கும் பேபி நிவேக்ஷாவின் நடிப்பில் குறையில்லை.
கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரிதாக கை கொடுக்கவில்லை படத்தை நகர்த்த உதவியுள்ளது பாடல்கள் எடுபடவில்லை, ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
தன்னுடைய குழந்தைக்காக மட்டும்தான் வாழும் நாயகியின் பாசப் போராட்டத்தை, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்லியிருக்கும் இயக்குநர் அனில் கட்ஸ், ஆரம்பக் காட்சியிலேயே பார்வையாளர்களை கதைக்குள் அழைத்துச் சென்றுவிட்டாலும், அதன் பிறகு நகரும் திரைக்கதையில் தேவையில்லாத சில விசயங்களை திணித்து படத்தை தொய்வடைய செய்கிறார். திரைக்கதையில் இன்னும் மெனக்கெடல் செய்திருந்தால் நல்ல முயர்சியாக இருந்திருக்கும்,
மொத்தத்தில், ‘சபரி’ ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர்.
Rating 3/5