சிக்லெட்ஸ்
இயக்குனர் – முத்து எம்
நடிகர்கள் – சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமான்
இசை – பாலமுரளி
தயாரிப்பு – எஸ்எஸ்பி பிலிம்ஸ்
4 இளம் பெண்கள் பெண்கள் காதலனுடன் நேரத்தை செலவிட அப்பா அம்மாவிற்கு தெரியாமல் டேட்டிங் செல்கிறார்கள். இது தெரியவரும் பெற்றோர்கள் அவர்களைத் தேடி பயணிக்கிறார்கள் பொது நடக்கும் கலாட்டாக்களும் களேபரங்களும் தான் படம்.
இயக்குனர் முத்து எம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் சிக்லெட்ஸ். இந்த படத்தில் சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமான், மரனாபாலா, ஜாக் ராபின்சன், அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா, ராஜகோபால் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்எஸ்பி பிலிம்ஸ் சார்பில் எஸ் ஸ்ரீனிவாசன் குரு தயாரிக்க, பாலமுரளி இசையமைத்துள்ளார். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு மற்றும் விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் செய்துள்ளார். முழுக்க முழுக்க 2K கிட்ஸ்சை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டு உள்ளது.
எந்த வகையிலும் குழந்தைகளுடனோ, குடும்பத்துடனோ இப்படத்தை பார்க்க முடியாது.
படம் முழுக்க இரட்டை அர்த்த ஜோக்குகள் மட்டுமில்லாமல், நேரடியான செக்ஸியான டயலாக், செக்ஸியான காட்சிகள் என படம் நகர்கிறது. இறுதி கட்டத்தில் மட்டும் கருத்து சொல்லி தப்பிக்க பார்த்திருக்கிறார்கள்.
க்ளைமாக்ஸில் கருத்து சொல்லிவிட்டால் ஒரு படம் நல்ல படமாகிவிடுமா?
ஒரு படத்திற்கான மையம் என்ன ?அது எப்படி சொல்ல வேண்டும் ? அது எப்படி திரையில் வெளிப்பட வேண்டும் ? திரை மொழி என்பது என்ன ? இது எதுவுமே, இந்த படத்தில் சரியாக கையாளப்படவே இல்லை.
ஒரு செக்ஸ் காமெடி மூலம் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் படி படம் எடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் படத்தின் உருவாக்கத்தில் தெரிகிறது, அதிலும் கூட ஒரு திரைநேர்த்தி இல்லாமலே வந்திருக்கிறது.
அடல்ட் காமெடி படங்கள் தமிழுக்கு கண்டிப்பாக தேவைதான் ஆனால் அதை மிகச் சரியாக செய்ய வேண்டும். எப்படி செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாகவும் இந்த படத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த படத்தில் நடந்த ஒற்றை நல்ல விஷயம் என்னவென்றால், பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அவர்கள் பக்கமும் பேச வேண்டும். அவர்களுக்கும் செக்ஸ் பற்றிய ஆர்வமும் ஆசையும் இருக்கிறது, அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், என்கிற கருத்தை சொல்கிறது.
மொத்தத்தில் சமூகத்தில் பேச வேண்டிய விஷயத்தை சொன்ன விதத்தில் வேண்டுமானால் இந்த படத்தை பாராட்டலாம்.
Rating 3/5