சைரன்
இயக்குனர்- அந்தோனி பாக்கியராஜ்
நடிகர்கள் – ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி
இசை – ஜி.வி. பிரகாஷ்
தயாரிப்பு – சுஜாதா விஜயகுமார்
ஒருவன் தான் செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கிறான் . மாற்றுத்திறனாளியான தன் மனைவியை பிரிந்தும் தனது மகளை பார்க்க வேண்டும் என்கிற தவிப்பிலும் இருக்கிறான். ஒரு நாள் பரோலில் வெளிவரும் தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்க காரணமானவர்களை பழி வாங்குகிறார்.இதன் பின் அவர் போலிஸில் பிடிபட்டார இல்லையா என்பது தான் இந்த படத்தின் மீதி கதை.
அறிமுக இயக்குநர்களை நம்பி அதில் வெற்றி பெறுபவர் ஜெயம் ரவி.சமீபத்தில் பிரதீப் ஆண்டனியுடன் கோமாளி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். கோமாளி படத்தில் கிளைமேக்ஸில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்தவர் இந்த படம் முழுக்கவே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் திலக வர்மன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இருக்கிறார். விஸ்வாசம், சர்தார் உள்ளிட்ட படங்களில் துணை திரைக்கதையாசிரியராக பணியாற்றிய அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
ஆம்புலன்ஸ் டிரைவரான ஜெயம் ரவிக்கும் காவல் துறை அதிகாரியான கீர்த்தி சுரேஷுக்கும் இடையே ஏற்படும் ஆட்டம்தான் இப்படம். இந்த படத்தின் திரைக்கதை படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. ஃபிளாஷ்பேக் காட்சியில் சிறிது நேரம் மட்டுமே இளமையான ஜெயம் ரவியாக வருகிறார். காது கேளாத வாய் பேச முடியாத மனைவியாக அனுபமா பரமேஸ்வரன் இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவியை தாண்டி இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கும் அதிக பங்கு இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
ஆரம்பத்தில் நமக்கு அது ஒத்துப், போகவில்லை என்றாலும் கதை போகும் போக்கில் அவர் நடிப்பை பார்த்து ரசிகர்கள் கைதட்ட ஆரம்பிப்பதே அவரது நடிப்பின் வெற்றி என்று சொல்லலாம்.
இந்தப் படத்ஹ்டில் கதை போல பல படங்கள் வந்துள்ளது ஆனால் அதர்கேற்ற திரைக்கதை கொடுத்துள்ளது இந்த படத்தை சிறப்பாக காட்டியுள்ளது.படத்தின் முதல் பாதியில் யோகி பாபுவின் காமெடியும் , இரண்டாம் பாதியில் சமூக நோக்க சிந்தனைகளை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர். இந்நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கான டிரிபியூட்டாகவும் இந்த படம் மாறியுள்ளது கூடுதல் சிறப்பு. வில்லன்களாக அழகம் பெருமாள், சமுத்திரகனி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் பாடல்களும், சாம் சி.எஸ் பின்னணி இசையும் இந்த படத்தில் பெரிதாக கை கொடுக்கவில்லை , இந்தப் படத்தில் இசைக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் போட்டிருந்தால் இன்னும் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கும்.சில இடங்களில் திரைக்கதை இன்னும் சரி செய்திருக்கலாம் .
மொத்தத்தில் சைரன் கண்டிப்பாக அனைத்து வித ரசிகர்களையும் திருப்தி படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது