Rating 3/5
ஜாலியோ ஜிம்கானா
இயக்கம் – சக்தி சிதம்பரம்
நடிகர்கள் – பிரபு தேவா , அபிராமி , யோகிபாபு
இசை – அஸ்வின் விநாயகமூர்த்தி
தயாரிப்பு – புனித் ராஜன்
ஒரு பெண் தன் குடும்பத்துடன் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.அங்குள்ள எம்.எல்.ஏவிடம் இருந்து பெரிய ஆர்டர் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், அதற்கான பணத்தை தராமல் எம்.எல்.ஏவின் ஆட்கள் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவரை தாக்க அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்டுகிறார்.கடையை நடத்த முடியாமல் அந்த பெண் தவிக்க, தாத்தாவின் யோசனைப்படி வழக்கறிஞர் ஒருவரின் உதவியை நாடி அந்தப் பெண்ணின் குடும்பம் செல்கிறது. அங்கு அவரை யாரோ கொலை செய்துவிட, தங்கள் மேல் கொலைப்பழி விழுந்துவிட்டதோ என பயந்து அவரது உடலை வெளியேற்ற அந்தக் குடும்பம் முயற்சிக்கிறது. அதன் பின்னர் நடக்கும் காமெடி கலாட்டா தான் இந்த ஜாலியா ஜிம்கானா.
பிரபுதேவா படம் முழுவதும் சடலமாக நடித்து மிரட்டியிருக்கிறார். அவரது கதாபாத்திரம் ஒரு நல்ல காரியம் செய்ய முயற்சிக்கும்போது கொல்லப்படுவது ஹார்ட் டச்சிங்.
மேலும் அபிராமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், யோகிபாபு பல இடங்களில் சிரிக்க வைத்துள்ளார். அதேபோல் தான் ஜான் விஜய், ரோபோ ஷங்கர், எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரங்களும். நம்மை சிரிக்க வைக்க தங்களால் முடிந்ததை மெனக்கெடுகிறார்கள். எனினும் அபிராமி அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுகிறார். மடோனாவை விட அபிராமி தான் படத்தின் பல இடங்களில் கலகலப்பூட்டுகிறார்.
இந்த படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார் , பாடல்கள் அவ்வளவு சிறப்பக இல்லை ஆனால் பிண்ணனி இசை நன்றாக இருந்தது, குறிப்பாக ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா’ பாடல் ஆட்டம்போட வைக்கிறது. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையானவற்றை கொடுத்திருக்கிறது, ஒரு சில காட்சிகள் கவர்ந்தது,
தாங்கள் செய்யாத ஒரு கொலையை மறைக்க ஒரு குடும்பம் முயர்சிக்கிறது , அதிலிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம், இது போன்ற கதையம்சம் கொண்ட படங்கள் பல வந்துள்ளது எடுத்துக்காட்டிற்கு கமலின் பஞ்ச தந்திரம் , அதே நகைச்சுவை பாணியில் இந்தப்படத்தை இயக்குனர் உருவாக்கியுள்ளார். ஆனால் அங்காங்கே திரைக்கதை தொய்வடைகிறது , அந்த இடங்களில் யோகிபாபு நகைசுவை நம்மை மறக்க செய்கிறது. சில லாஜிக் மிஸ்டேக் தவிர்த்திருந்தால் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த “ஜாலியோ ஜிம்கானா” சஸ்பென்ஸ் கலந்த ஒரு நகைச்சுவை அனுபவம்.
Rating 3/5