‘டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 113.23 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டியுள்ளது!
மார்வெல் ஸ்டுடியோஸின் எபிக் ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ. 113 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனைப் படைத்துள்ளது.
உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியதால் திரையரங்குகளில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மார்வெல் ஸ்டுடியோஸின் ‘டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.