நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
இயக்குனர் – பிரசாத் குமார்
நடிகர்கள் – செந்தூர் பாண்டியன், பிரீத்தி கரன், பூர்ணிமா ரவி
இசை – பிரதீப் குமார்
தயாரிப்பு – பிரதீப் குமார், பூர்வா புரொடக்ஷன்
ஒரு இளைஞன் கல்லூரி படிப்பு முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சோஷியல் மீடியா மூலம் பெண்களுடன் பேசி தன் பொழுதை போக்கிக் கொண்டு இருக்கிறான், பெண்களை சினிமாவிற்கு அழைத்து செல்வது பூங்காவிற்கு அழைத்து செல்வது அங்கு சென்று சில்மிஷங்கள் செய்வதையே குறிக்கோளாக வைத்திருக்கிறான், இவ்வாறு செய்து கொண்டிருப்பவன் ஒரு நாள் ஒரு பெண்ணை அவளின் பிறந்த நாளன்று சந்திக்க செல்கிறான் அப்படி அவளை பார்க்க செல்லும்போது அவளை தியேட்டருக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளான் , ஆனால் அந்தப் பெண் தியேட்டர் வேண்டாம் என்று மறுக்க வேறொரு இடத்திற்கு இருவரும் செல்ல முடிவெடுத்து அங்கு செல்கின்றனர் அதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை ,
இந்தப் படம் சற்று ஆச்சர்யம் தான் , தற்போது நடக்கும் நிகழ்வை அப்படியே படமாக்கியுள்ளனர் , இந்த படத்திற்கு A சான்றிதழ் குடுத்தது சரிதான் அதை முதல் பத்து நிமிடங்களிலேயே நிரூபித்து விட்டனர் , அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்களும் வார்த்தைகளும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே என்பது போல் உள்ளது,
இந்தப் படத்தில் நடித்துள்ள செந்தூர் பாண்டியன் முதல் பட நாயகன் போல இல்லாமல் கை தேர்ந்த நடிகர் போல நடித்துள்ளார் , பார்ப்பதற்கு நம் பக்கத்து வீட்டு பையன் போல தோற்றம் உள்ளதால் நம்மிடம் எளிதாக இணைந்து விடுகிறார், தன் நடிப்பால் இப்போதைய இளைஞர்களின் வாழ்வை நம்மிடம் அழகாக காட்டியுள்ளார், கதாநாயகி மாடலிங் துறையை சேர்ந்தவர். ஆனால் அவர் பார்ப்பதற்கு அப்படி இல்லை தோற்றம் சாதாரண பெண்ணை போல் இருந்தது , அவர் தாங்கியுறுக்கும் கதாபாத்திரம் மிகவும் நன்றாக இருந்தது,
படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரமும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர், தேவையில்லாத காட்சிகள் எதும் இல்லை என்பதே படத்திற்கு பெரிய உதவியாக இருந்தது,
படத்தில் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் படத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது, பாடல் காட்சிகள் அனைத்தும் வித்தியாசமா முறையில் இருந்தது , பாடல்கள் கேட்க நன்றாக இருந்தது படத்தின் கதையோடு பொருந்தியுள்ளதால் படம் முடிந்ததே தெரியாமல் போனது,
இந்தப் படத்தில் பிடித்த விஷயம் இது சரி இது தவறு என்று கூறாமல் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே எடுத்துள்ளது தான் , இந்த படம் பார்த்தால் இன்றைய கால கட்ட இளைஞர்கள் மனதில் என்ன நினைத்துள்ளனர் அவர்களின் புரிதல் ஆகியவற்றை தெளிவாகக் காட்டியுள்ளனர்
மொத்தத்தில் பிள்ளைகள் எப்படி பெயரை வாங்க கூடாது என்பதற்கு உதாரணம் இந்த ” நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே “
Rating 3.5/5