“நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு”! என்று கூறினார் மறைந்த மாமனிதர் திரு ஏபிஜே அப்துல் கலாம் . இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையை ஒரு வரலாற்றாய்ப் பதிப்பதற்கு ஒரு வாய்ப்பு உண்டு சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டில் களமிறங்கி, உலகளாவிய அளவில் பல நாடுகளில், போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பல வென்ற திரு சத்தியமூர்த்தி தான், இன்றைய நம் சாதனையாளர். சிறந்த பண்பாளர் மனிதநேயமிக்க மனிதர் , விளையாட்டு போட்டிகளில் சாதித்த லே போதும் என்று தன்னை நிறுத்திக் கொள்ளாமல் இச்சமுதாயத்திற்கென்று நாம் ஏதாவது பங்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், “ஹய் ஆக்டேவ்”, “சென்னையில் திருவையாறு” என்ற இயக்கங்களின் வாயிலாக, முதியோர் காப்பகங்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கும் கல்வி, என்று உதவிகள் பல முனைந்துள்ளார். சமுதாயப் பங்களிப்புக்காக விவேகானந்தர் விருது மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் விருது, பெற்ற பெருமையும் இவரைச் சாரும்.டோக்கியோ தமிழ்ச் சங்கமும்–இன வேட்டிவ் நிறுவனமும் இணைந்து உங்கள் மாலை பொழுதினை பொன்மாலையாக மாற்ற “விண்ணைத் தாண்டி” என்ற தலைப்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்* *சாதனையாளர்கள் சிலரை தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்து , டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் முகநூலிலன் வலை பக்கத்திலும் & இன்னோவேட்டிவ் நிறுவனத்தின் முகநூலின் பக்கத்திலும் நேரலையாக வழங்க இருக்கிறார்கள். அந்த வகையில் ஆகஸ்டு மாதம் 14ம் தேதி வெள்ளிக்கிழமையன்று சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர் திரு சத்தியமூர்த்தி அவர்களை நேர்காணல் செய்ய இருக்கிறார்கள். கூடுதல் சிறப்பம்சமாக ஐயா திரு ரங்கநாதன் முலவாடி ,தலைவர், (ஏபிகே ஏஒடிஸ் தோசைக்கல்) அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். ஜப்பான் நேரப்படி மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை , இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி தொடங்கி மாலை 3.30 மணி முடிய, நிகழ்ச்சி நடைபெறும் . உலகெங்கும் உள்ள தமிழர்கள் நிகழ்ச்சியினை நேரலையாக கண்டு களிக்கலாம்.