பைரி பாகம் 1
இயக்குனர்- ஜான் க்லெடி
நடிகர்கள் – சையத் மஜீத் , மேகனா எலன் , விஜி சேகர்
இசை – அருண் ராஜ்
தயாரிப்பு – துரை ராஜ்
ஒருவன் கல்லூரி படிப்பு படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் புறா வளர்ப்பதில் ஈடுபாடோடு இருக்கிறான், மேலும் புறா பந்தயமும் நடத்தி வருகிறான்.அந்த ஊரில் பெரிய ரவுடியாக இருக்கும் ஒருவரும் புறா பந்தயம் நடத்துகிறார். புறா பந்தயத்தில் அந்த ரவுடி செய்யும் மோசடியை கதானாயகன் கண்டுபிடித்து தட்டிக்கேட்கிறார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது, இதன் பின் ஏற்படும் பிரச்சினைகளை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார், என்பதே இப்படத்தின் கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சையத் மஜித்தின் நடிப்பில் குறையில்லை கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சேகர், மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதம் சிறப்பாக இருந்தது, அவரின் நடிப்பு நம் கவனம் ஈர்க்கும் வகையிலும் இருக்கிறது.நாயகனின் நண்பராக நடித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடி தன்னுடைய நடிப்பை கவனிக்க வைத்திருக்கிறார். சுயம்பு என்ற வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் வினு லாரன்ஸ், நாயகிகளாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன் என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும்படி இருக்கிறது.
இந்தப் படத்தில் மிக சிறப்பக இருப்பது ஊர் மக்களின் வாழ்வியல், நாகர்கோவில் மக்களின் வாழ்வியலை, எந்தவித மாற்றமும் இன்றி மிக எதார்த்தமாக சொல்லியிருப்பதோடு, புறா பந்தயத்தின் பின்னனியை மிக சுவாரஸ்யமாக விவரித்துள்ளார் இயக்குனர். பைரி என்ற வார்த்தைக்கும் சரியான விளக்கத்தை சொல்லியிருக்கின்றனர். ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவு நாகர்கோவில் அழகையும், அம்மக்களின் வாழ்வியலையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது. அருண் ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
இயக்குநர் சிறப்பான திரைக்கதை உருவாக்கியுள்ளது மட்டுமில்லாமல் அதை சுவாரஷ்யமாக எடுத்தும் காட்டியிருக்கிறார். குறிப்பாக புறா பந்தயத்தை காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. கிராபிக்ஸ் உதவியோடு புறா பந்தயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் மேக்கிங் வியக்க வைக்கிறது.
இந்தப் படத்தில் நடிகர்களில் பலர் புதுமுகங்கள் இருந்தாலும், அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர் .படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்வதுபோல் உள்ளது அனைவரது கதாபாத்திரம். இந்தப் படத்தில் வட்டார பேச்சு அதிகமாக இருக்கிறது . அந்த ஊர் மக்களின் பேச்சு மற்றும் உடல் மொழி என அனைத்தும் படத்திற்கு பலமாக இருந்தாலும், சில வசனங்கள் அனைவருக்கும் புரியாதபடி இருக்கிறது. மற்றபடி, புறா பந்தயம் வைத்து பல படங்கள் வந்துள்ளது எனெனினும் ஒரு புதிய களத்தை, புதிய கோணத்தில், ரசிகர்களுக்கு இயக்குனர் கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் இந்த பைரி அறிமுக இயக்குனரின் ஒரு அருமையான படைப்பு .
3.5/5
Byri Public Review | Byri Review | Byri Movie Review – #ByriReview –
Actor Sathyendran Byri Movie Review – Byri Review | Byri Movie Review – #ByriReview –