ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள்ளார்கள்

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள்ளார்கள்.இத்திரைப்படத்தின் பெயர் 16, பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்ட சுவாரசியமான டீசரின் வழியாக தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திரைப்படத்திற்கு, “அமரன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை, உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் திரு. ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை-தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைகிறது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் ராஜ்குமார் பெரியசாமி. மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் ராஹுல் சிங் ஷிவ் அரூர் எழுதிய ‘இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ தொடரிலிருந்து ஒரு அத்தியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.

எழுதி-இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி, நெடிய ஆய்வுகளுக்குப் பிறகு, கவனமாக ‘அமரன்’ திரைப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார், இது நிச்சயமாக தமிழ் மற்றும் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு சாதனையை நிகழ்த்தும்! தமிழ்த் திரை நட்சத்திரமான சிவகார்த்திகேயன், நிஜவாழ்வின் நாயகனான ஒருவரின், தனித்துவமிக்க கதாபாத்திரத்தை ஏற்று, அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார். மேலும், மிகுந்த திறமைசாலியான சாய் பல்லவியுடன் அவர் இணைந்து நடித்திருக்கிறார். சாய் பல்லவி, இந்தப் படத்திற்கு இன்னொரு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறார்.

‘அமரன்’ திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் சி.ஹெச்.சாய், படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன், சண்டைக்காட்சி இயக்குனர் ஸ்டீஃபன் ரிச்டர், உடை வடிவமைப்பாளர்கள் அம்ரிதா ராம் மற்றும் சமீரா சனீஷ் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுகு திரையுலகில் தங்கள் முதல் தயாரிப்பான ‘மேஜர்’ மூலம் மிகுந்த புகழ்பெற்றவர்கள்,இப்போது ‘அமரன்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைகிறார்கள். இந்தப் படமும் இந்தியாவையும் அதன் கதாநாயகர்களையும் கொண்டாடும் விதமாக அமைந்து, உலகெங்கும் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

RKFI நிறுவனத்தின் 50-வது படமான ‘விக்ரம்’ 2022-ஆம் ஆண்டு, திரையுலகில் சூறாவளியாக நுழைந்து, மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் 51-வது முயற்சியான ‘அமரன்’ திரைப்படமும் வெற்றிகரமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டைக்காட்சிகளும், உணர்வுபூர்வமான காட்சிகளும் மிகச்சரியான கலவையாக அமைந்திருக்கும் ‘அமரன்’ திரைப்படம் பற்றிய அடுத்த அறிவிப்புகளுக்குக் காத்திருங்கள். இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்தப் படம் 2024-ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும்.

Raaj Kamal Films International (“RKFI) and Sony Pictures International Productions(SPIP) are proud to reveal the title of their much awaited project “SK21” on the eve of actor Sivakarthikeyan’s birthday.The film’s riveting teaser set against the backdrop of Kashmir revealing the title and lead character is launched on 16th February, 2024.

The film is christened “AMARAN” and is produced by Ulaganayagan Kamal Hassan, Sony Pictures International Productions, Mr.R.Mahendran and co-produced by Vakil Khan’s God Bless Entertainment. The film, written and directed by Mr. Rajkumar Periasamy is based on real-life events of Major Mukund Varadarajan and a chapter from the “INDIA’S MOST FEARLESS” series, written by Rahul Singh and Shiv Aroor.

Writer-director Rajkumar Periasamy has done extensive research and crafted the story screenplay for the film “AMARAN”, and it’s all set to become a masterpiece of Tamil – Indian cinema! Tamil star Sivakarthikeyan leads the cast and has given a stirring performance in a unique character based on a real life Hero. Further, he is paired with the immensely talented Ms.Sai Pallavi, who adds a new dimension to the film.AMARAN boasts a stellar technical crew including Music Director G V Prakash,Production Designer Rajeevan, Cinematographer CH Sai, Editor R. Kalaivanan, Action Director Stefan Richter, Costume Designers Amritha Ram and Sameera Saneesh.

Sony Pictures International Productions, which received great acclaim for its debut in Telugu cinema with the film ‘Major,’ has entered the Tamil cinema world with its upcoming release ‘Amaran’ with yet another story that celebrates India and its heroes and promises to entertain audiences worldwide. As RKFI’s 51st production, AMARAN follows in the footsteps of the blockbuster success of their 50th venture “Vikram”, which took the Indian film industry by storm in 2022. Stay tuned for AMARAN’s mesmerizing blend of action and emotion. AMARAN is in its last stage of production and will be released in cinemas worldwide in the summer of 2024.

Teaser Link 🔗 https://youtu.be/A76db9lX2fE?si=qQMZ5K3hl5F61v0I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *