வடக்குபட்டி ராமசாமி
இயக்குநர்: கார்த்திக் யோகி
நடிகர்கள்: சந்தானம், மேகா ஆகாஷ்
இசை: ஷான் ரோல்டன்
தயாரிப்பு – விஷ்வ பிரசாத்
ஒரு சிறுவன் பானை விற்கும் பணியை செய்து வருகிறான் ஆனால் மக்கள் யாரும் பானையை வாங்க முன்வரவில்லை என்பதால் வறுமையில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என யோசிக்கும் சிறுவன் அங்குள்ள மக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறான். கடவுளின் பெயரால் எப்படி ஏமாற்றி சம்பாதிக்கலாம் என பல வேலைகளை பார்த்து தனது வாழ்க்கையை நடத்ஹ்டி வருகிறான். அந்த கிராமத்துக்கு வரும் ஒரு தாசில்தார் அவன் செய்யும் காரியத்தை தெரிந்துக் கிண்டு அவனுடன் போட்டி போஉட்கிறார் , அதன் பின் என்ன நடந்தது என்பது தான் இந்தப்படத்தின் கதை
டிக்கிலோனா படத்தில் டைம் டிராவல் கதையை வைத்து இயக்குனர் கார்த்திக் ஒரு நகைச்சுவை படத்தை உருவாக்கினார். அந்த படத்தில் அனைத்ஹ்டு கதாபாத்ஹ்டிரங்களையும் நன்றாக கையாண்டிருப்பார் , இரண்டாம் பாகத்தில் நிழல்கள் ரவியின் காமெடி ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக அமைந்துள்ளது.
சந்தானம் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்தார். இந்தக் கதாபாத்திரம் அவர் பல படங்களில் நடித்தது தான் எனினும் அதில் தனித்துவமாக நடித்துள்ளார். ஹீரோயின் மேகா ஆகாஷ் கொடுத்த கதாபத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் மாறன் மற்றும் சேஷுவின் காமெடி படத்தை நகர்த்துகிறது. இரண்டாம் பாதியில் நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, ஜான் விஜய், இட்டிஸ் பிரசாந்த் என பலர் இணைந்து படத்தை தங்களின் தேர்ந்த நடிப்பால் காப்பாற்றியுள்ளனர். அனைவரையும் வைத்துக் கொண்டு சரியான காமெடி சீன்களை கொடுத்து ரசிகர்களை ரசிகர்களை என்டர்டைன்ட் செய்துள்ளார்.
மூட நம்பிக்கையில் இருக்கும் கெட்ட விஷயங்களை எளிமையாக புரியும்படியும் தனது பகுத்தறிவையும்ம் மக்களிடம் சரியாக கொண்டு சேர்த்துள்ளார். ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.
படம் 19774களில் நடப்பது போல காட்டப்பட்டுள்ளது ஆனால் அதற்கென தனி மெனக்கெடல் போடப்படவில்லை , வசனகளும் தற்போது உள்ள நடைமுறை போலவே அமைந்துள்ளது, படத்தில் சில கதாபாத்திரங்களை தவிர்த்திருக்கலாம். ஒரு சில குறைகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த படத்தை தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து சிரித்து ரசிக்கலாம்.
மொத்தத்தில் காமெடி படத்தில் கதை தேவையில்லைதான் ஆனால் அது இல்லாதது தெரியக்கூடாது இந்தப்படத்தில் அது தெரியாமல் நகைச்சுவையாக படத்தை நகர்த்தியுள்ளனர்.
Rating 3/5