பயமரியா பிரம்மை
இயக்குனர் – ராகுல் கபாலி
நடிகர்கள் – குரு சோம சுந்தரம் , ஜே டி , ஹரிஷ் உத்தமன்
இசை – கே
தயாரிப்பு – ராகுல் கபாலி
கொலை குற்றத்திற்காக சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் தனது வாழ்க்கையை புத்தமாக எழுதுவதற்காக எழுத்தாளர் ஒருவரை சிறையில் சந்திக்கிறார். இருவரும் அவரவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை சொல்கின்றனர் , அப்போது இருவருக்குமான உரையாடலின் போது, புத்தகம் ஒருவரின் வாழ்க்கையை எப்படி வேண்டுமானலும் மாற்றும் சக்தி கொண்டது என்று அந்த கொலையாளியிடம் சொல்கிறார் , அதனை விவரிக்க புத்தகத்தின் வழியாகவே படத்தை நகர்த்துகின்ற்னர், இதுவே இந்தப்படத்தின் கதை.
ஆறு கதாபாத்திரங்கள் ஜெகதீஷ் என்ற கதபாத்திரத்தின் வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களை திரையில் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியிருக்கிறார்கள் இயக்குனர்.
இந்தப் படத்தின் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் ஜெகதீஷ் , மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார்
ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஆறு பேர் ஜெகதீஷ் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்கள். மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் ஏ.கே, எழுத்தாளர் கபிலனாக நடித்திருக்கும் வினோத் சாகர், ஜெகதீஷின் மனைவியாக நடித்திருக்கும் திவ்யா கணேஷ் என படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது வேலை என்னவென்று தெரியவில்லை என்றாலும், இயக்குநர் சொன்னதை கேட்டு அப்படியே நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கே ஒளிப்பதிவு செய்துள்ளார், பாடல்கள் ஒன்றும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனினும் பிண்ணனி இசை படத்தை தாங்கி பிடித்துள்ளது, மேலும் இந்தப் படத்திற்கு பிரவின் மற்றும் நந்தா என இருவர் ஒளிப்பதிவும் செய்துள்ளனர், படத்திற்கு ஒளிப்பதிவு சரியாக இருந்தது,
ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கையை சுற்றிதான் இந்த மொத்த படமும் நகர்கிறது , எனினும் அந்த ஜெகதிஷ் கதாபாத்திரம் நம்மிடம் ஒட்ட இன்னும் சில காட்சிகள் செய்திருக்கலாம் இயக்குநர் ராகுல் கபாலி, புத்தகங்கள் மனிதர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை படைத்தைவை, என்ற நல்ல விசயத்தை இந்தப் படத்தில் இயக்குனர் சொல்ல முயற்சி செய்துள்ளார், இன்னும் திரைக்கதையில் சில மெனக்கெடல் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், இந்த ‘பயமறியா பிரம்மை’ புத்தகத்தின் வலிமை
Rating 2.8/5